Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் நல்லா தேறிக்கிட்டு இருக்காரு... உற்சாகமா இருக்கு... சீக்கிரத்துலயே அணியில இணைவாரு!

துபாய் : காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் பங்கேற்காத மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, உடல்நிலை தேறி வருவதாக தற்போயை கேப்டன் கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கடந்த போட்டிகளில் விளையாடவில்லை.

அவர் இல்லாத குறை தெரியாதவகையில் அணியை கீரன் பொல்லார்ட் வழிநடத்தி வருகிறார். அணியின் துவக்க வீரராக களமிறங்கிவரும் இஷான் கிஷனும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இஷான் கிஷன் 72 ரன் குவிப்பு

இஷான் கிஷன் 72 ரன் குவிப்பு

நேற்றைய ஐபிஎல் 51வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. அணியின் இஷான் கிஷன் 47 பந்துகளில் 72 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

சிறப்பான கீரன் பொல்லார்ட்

சிறப்பான கீரன் பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆயினும் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கீரன் பொல்லார்ட் ரோகித் இல்லாத குறை தெரியாதவகையில் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

மிடில் ஆர்டரில் பும்ரா சிறப்பு

மிடில் ஆர்டரில் பும்ரா சிறப்பு

நேற்றைய போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கீரன் பொல்லார்ட், போல்ட் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்படுவதாகவும் துவக்க வீரர்களை அவுட் ஆக்குவதில் சிறப்பாக உள்ளதாகவும் அதேபோல மிடில் ஆர்டரில் பும்ரா சிறப்பாக பந்து வீசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உற்சாகத்துடன் காத்திருப்பு

உற்சாகத்துடன் காத்திருப்பு

ரோகித் சர்மா சிறப்பாக தேறி வருவதாகவும் அவர் மீண்டும் அணியில் இணைவதற்காக அணி வீரர்கள் உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும் பொல்லார்ட் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதேபோல இஷான் கிஷன் போட்டிக்கு போட்டி முன்னேறி வருவதாகவும் பொல்லார்ட கூறினார்.

Story first published: Sunday, November 1, 2020, 11:53 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+