Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு எல்லாம் ஏமாற்றம் கொடுத்திட்டேன்.. மனசு வலிக்குது.. கண் கலங்கிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

ஹாபர்ட் : டி20 உலக கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரான் தெரிவித்துள்ளார்.

குரூப் பி பிரிவில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பிராண்டன் கிங் மட்டும் 48 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார்.

பேட்டிங் சரியில்லை

பேட்டிங் சரியில்லை

இதனை அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 17வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் நிக்கோலஸ் பூரான் மிகவும் கவலையாக பேசினார். மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நாங்கள் இந்த தொடரில் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

கஷ்டமாக இருக்கிறது

கஷ்டமாக இருக்கிறது

இன்றும் பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம். இது போன்ற முக்கியமான ஆட்டத்தில் 146 ரன்களை தற்காத்துக் கொண்டு வெற்றி பெறுவது என்பது மிகவும் கஷ்டம். இந்த இலக்கை பந்து வீச்சாளர்களால் ஒருபோதும் தற்காத்துக் கொள்ள முடியாது. நான் அயர்லாந்து அணிக்கு வாழ்த்துக்கள் கூறுகிறேன். அவர்கள் இன்று சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்தனர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

எங்கள் அணியில் நிறைய நல்ல விஷயங்களை நடந்து இருக்கிறது. பிராண்டன் கிங் , அன்சாரி ஆகியோர் நிச்சயம் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறோம். எங்கள் நாட்டு ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக மனது வலிக்கிறது. ஆனால் நாம் இன்னொரு நாள் பார்க்க வாழ்கிறோம் என்று கேப்டன் பூரான் குறிப்பிட்டுள்ளார்.

தோற்கடிக்கப்பட்டோம்

தோற்கடிக்கப்பட்டோம்

இதனைத் தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் சிம்மின்ஸ், நாங்கள் அயர்லாந்திடம் அனைத்து விதத்திலும் தோற்கடிக்கப்பட்டோம் என்று குறிப்பிட்டார். நல்ல தொடக்கத்தை பேட்ஸ்மேன்கள் அளித்தாலும் அதனை எங்கள் வீரர்களால் தொடர முடியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.தாயகம் சென்ற பிறகு எந்தத் தவறு செய்தோம்ம் அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்வோம் என்று அவர் கூறினார்.

Story first published: Friday, October 21, 2022, 17:59 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+