Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினை பவுலர்கள் வம்பிழுத்தால், அவர் என்ன செய்வார் தெரியுமா? இது சச்சின் ஸ்டைல்.. பின்னணி இது தான்!

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றுவதற்காக பவுலர்கள் சில சேட்டைகளை செய்வார்கள். பேட்ஸ்மேன்களை வசைப்பாடி அவர்களை கிண்டல் செய்வதை ஆங்கிலத்தில் ஸ்லேஜிங் என்று கூறுவார்கள்.

இந்த மாதிரி ஸ்லேஜிங் செய்வதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை அடித்துக் கொள்ள முடியாது. வீரர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை ஆட்டம் இழக்க வைக்க ஸ்லேஜிங் செய்வது ஆஸ்திரேலிய வீரர்களால் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

cricket sachin tendulkar sledging

இதே போல் இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா போன்ற வீரர்களும் எதிரணி வீரர்களை ஸ்லேஜிங் செய்வது வழக்கம். ஆனால் சில வீரர்களிடம் ஸ்லேஜிங் செய்தால் அவர்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். குறிப்பாக விராட் கோலி போன்ற வீரர்களிடம் ஸ்லஜிங் செய்தால் அவர் அமைதியாக திரும்பி செல்ல மாட்டார். மீண்டும் கோலி தன்னைத் திட்டிய வீரரின் குடும்பத்தையே இழுத்து பேசுவார்.

ஆனால் சில வீரர்கள் தேவையில்லாமல் கோபப்பட்டு ஆட்டம் இழந்து விடுவார்கள். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரிடம் இதுவரை பல வீரர்கள் ஸ்லஜிங் செய்திருக்கிறார்கள். அவரை வம்பு இழுத்திருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு செய்தும் சச்சின் டெண்டுல்கர் அதற்கு எந்தவித ரியாக்ஷனும் காட்ட மாட்டார்.

சச்சின் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பவுலரை திட்டி இருக்கிறார் என்று உங்களால் ஒரு வீடியோவை கூட பார்க்க முடியாது. அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். ஒரு பவுலர் தம்மை திட்டப் போகிறார் என்று தெரிந்தால் சச்சின் டெண்டுல்கர் அவரிடம் கவனத்தையே செலுத்த மாட்டார். பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்து வீசி முடித்தவுடன் பவுலர்ஸ் ஸ்லேஜிங் செய்ய முற்படுவார்.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் இதை கொஞ்சம் கூட கவனிக்காமல் அருகே நகர்ந்து சென்று விடுவார். பவுலர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்தால் தானே நமக்கு கோபம் வரும். நாம் கவனிக்காமல் அருகே நகர்ந்து சென்றால் பவுலர் என்ன திட்டுகிறார் என்பதையே நமக்குத் தெரியாது அல்லவா? இதுதான் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்தும் யுக்தி. இதன் காரணமாக தான் சச்சின் டெண்டுல்கர் ஒருபோதும் கோபப்பட்டு தன்னுடைய விக்கெட்டை எளிதாக இழந்தது கிடையாது.

ஆனால் நம்மை கோபப்படுத்துகிறார் என்பதை உணரும் சச்சின், அதற்கு தனது பேட்டால் பலமுறை பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து ஒருமுறை பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், சச்சினை மட்டும் தயவுசெய்து ஸ்லஜிங் செய்து விடாதீர்கள் என்று தெரிவித்திருப்பார்கள்.

Story first published: Thursday, August 22, 2024, 18:26 [IST]
Other articles published on Aug 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+