Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் போட்ட ஒரே ஒரு சதம்.. அது இதுதான்.. அதிரடியாக கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ்

மும்பை: சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஒரு சதம் போட்டுள்ளார். அந்த சதம் போட்ட நாள் இன்று.. ஐபிஎல் போட்டிகள் மொத்தமாக தள்ளிப் போயுள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

டி20 போட்டிகள் வந்த சமயத்தில் இது இளைஞர்களுக்கான விளையாட்டு. இதில் வயதான வீரர்களுக்கு அதிக வேலை இருக்காது என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதை தவிடு பொடியாக்கியுள்ளனர் பல சீனியர்கள். அதில் சச்சின் முக்கியமானவர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்பத்தில் விளையாடினார் சச்சின். அப்போது அவர் அபாரமாக ஒகரு சதம் போட்டு அசத்தியுள்ளார். அந்த சதம் போட்ட சாதனை நாள்தான் இன்று.

சச்சின் போட்ட சதம்

சச்சின் போட்ட சதம்

இது நடந்தது 2011ம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனின்போது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும் மும்பை வாங்கடே மைதானத்தில் மோதின. அப்போட்டியில்தான் சச்சின் டெண்டுல்கர் தனது சதத்தைப் போட்டார். மொத்தம் 66 பந்துகளைச் சந்தித்த சச்சின் 100 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக

முன்னதாக கொச்சி அணி டாஸ் வென்று மும்பையை பேட் செய்யப் பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய டேவி ஜேக்கப்ஸும், சச்சினும் இணைந்து 61 ரன்களை சேர்த்தனர். 9வது ஓவரில் ஜேக்கப்ஸ் அவுட்டானார். பின்னர் அம்பட்டி ராயுடு சச்சினுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 116 ரன்களை விளாசினர். அம்பட்டி ராயுடு 33 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தார்.

மெக்கல்லம் அபார பேட்டிங்

மெக்கல்லம் அபார பேட்டிங்

பின்னர் ஆட வந்த கொச்சின் அணியில் மெக்கல்லம் மற்றும் ஜெயவர்த்தனே இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து 128 ரன்களைக் குவித்தனர். மெக்கல்லம் 81 ரன்கள் குவிக்க, மஹளா ஜெயவர்த்தனே 56 ரன்கள் எடுத்தார். கடைசியில் கொச்சின் அணி வெற்றி இலக்கை 8 விக்கெட் இழப்புக்கு எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அப்போது இடம் பெற்றிருந்தார் ரவீந்திர ஜடேஜா அவர் எடுத்த ரன்கள் 26 ஆகும்.

மும்பை அணி தோற்றது

மும்பை அணி தோற்றது

சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் 2334 ரன்களை 34.83 சராசரியுடன் எடுத்துள்ளார். அதில் 13 அரை சதம், ஒரு சதம் அடக்கம். ஐபிஎல் 2010 போட்டித் தொடரில் இவர்தான் அதிக ஸ்கோரை எட்டியவர் என்பது நினைவிருக்கலாம். சச்சின் காலத்துக்குப் பிறகு ஐபிஎல் பல அதிரடிகளைக் கண்டுள்ளது. அதில் கெய்ல், போலாக், டிவில்லியர்ஸ் என பலரும் அடக்கம். அந்த வரலாறுகள் மிக நீண்டவை.

Story first published: Wednesday, April 15, 2020, 19:00 [IST]
Other articles published on Apr 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+