ஆனானப்பட்ட லாராவையே அவுட்டாக்கிட்டாராமே சச்சின் மகன்!
மும்பை: சச்சின் டெண்டுல்கர் ஒரு காலத்தில் புலி போலப் பாய்ந்த பேட்ஸ்மேன் என்றால், அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சிறுத்தை போல பாயும் பவுலராக மாறி வருகிறார்.
தந்தைக்கு நேர் மாறாக வேகப் பந்து வீச்சாளராகும் ஆர்வத்தில் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் அர்ஜூன். அவரது வேகத்தில் சிக்கி ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிரையன் லாராவே அவுட்டாகியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
லாரா, அர்ஜூனிடம் வீழ்ந்த கதையை வாசிம் அக்ரம் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. மும்பையில் நேற்று மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டிக்கு முன்னதாக வாசிம் அக்ரம் இந்தத் தகவலை வெளியிட்டார்.

வாங்கடே மைதானத்தில் குட்டி பயிற்சி
நேற்று வாங்கடே மைதானத்தில் போட்டி தொடங்குவதர்கு முன்பு அர்ஜூன் டெண்டுல்கருடன் பேசிக் கொண்டிருந்தார் வாசிம் அக்ரம். அப்போது வேகப் பந்து வீச்சு குறித்து அர்ஜூனுக்கு டிப்ஸ் கொடுத்தார்.

இங்கிலாந்தில் சந்தித்தோம்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கடந்த கோடைகாலத்தில் நான் இங்கிலாந்தில் வைத்து அர்ஜூனை சந்தித்தேன். அப்போது ஒரு காட்சிப் போட்டியில் நாங்கள் விளையாடினோம்.

லாராவையே காலி செய்தார்
அர்ஜூன் பவுலிங் செய்தபோது நான் மிட் ஆன் பீல்டிங்கில் இருந்தேன். அப்போது பிரைன் லாராவை அழகாக அவுட்டாக்கினார் அர்ஜூன். அப்போதே எனக்குத் தெரிந்தது, இவருக்கு வேகப் பந்து வீச்சு நன்றாக வருகிறது என்று என்றார் அக்ரம்.

பேட்டிங்கை விட பவுலிங் சூப்பர்
அர்ஜூன் டெண்டுல்கர் மும்பையில் தனது வயதுக்குரிய அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். ஆனால் தந்தையைப் போல் இல்லாமல் பவுலிங்கில்தான் அவர் ஜொலித்து வருகிறார்.

ஆக்ரோஷமான பவுலராக மாற ஆசை
நல்ல பேட்ஸ்மேனாவதை விட ஆக்ரோஷமான வேகப் பந்து வீச்சாளராக வேண்டும் என்பதுதான் அர்ஜூனின் ஆசையாகவும் இருக்கிறதாம். இந்த விஷயத்தில் தந்தைக்கு நேர் மாறாக திகழ்கிறார் அர்ஜூன்.

இவர் அங்கே.. அவர் இங்கே
அர்ஜூனின் தந்தை சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐகான் பிளேயராக இருக்கிறார். வாசிம் அக்ரம், கொல்கத்தா அணியின் மென்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications