போட்டிக்கு நடுவே அடிக்கடி அனுப்பப்பட்ட மெசேஜ்.. டிக்ளேர் செய்ய அஞ்சிய இங்கிலாந்து.. காரணம் X பேக்டர்
சென்னை: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்ய அஞ்சியது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 178 ரன்னிற்கு ஆல் அவுட்ஆகியுள்ளது.
இந்தியாவிற்கு இங்கிலாந்து 419 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார்.

காரணம்
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்ய அஞ்சியது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. இதற்கு மூன்று விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி சென்னை பிட்ச் மீது இங்கிலாந்து அணிக்கு முழுமையாக நம்பிக்கை ஏற்படவில்லை.

நம்பிக்கை
சென்னை பிட்ச் இன்னும் பெரிய அளவில் பவுலிங் பிட்சாக முழுக்க முழுக்க மாறவில்லை. இதனால் இந்திய அணியை 400 ரன்களுக்கு சுருட்ட முடியும் என்ற நம்பிக்கை இங்கிலாந்து அணிக்கு இல்லை. இதனால்தான் கடைசி பவுலர் வரை இங்கிலாந்து அணியில் பேட்டிங் இறங்கினார்கள்.

பேட்டிங்
450 ரன்களாவது எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து நினைத்தது. அதேபோல் இரண்டாவதாக இந்திய அணியில் இருக்கும் பண்டை இங்கிலாந்து அணி வீரர்கள் எக்ஸ் பேக்டராக கருதுகிறார்கள். அதாவது இவர் நாளை போட்டியை மாற்றுவார். அதிரடியாக 100-150 ரன்களை இவர் எடுக்க வாய்ப்புள்ளது.

சந்தேகம்
இதனால் இன்னும் அதிக ரன்களை ஸ்கோர் போர்டில் வைக்க இங்கிலாந்து அணி திட்டமிட்டது. அதேபோல் இந்திய அணியில் கோலி, புஜாரா போன்றவர்கள் அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைக்கவும் கூட வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யாமல் தள்ளிப்போட்டது.

அஞ்சியது
இதனால் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக அஞ்சி நடுங்கியது. ஆனால் அதற்குள் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து அஸ்வின் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது . இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications