Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியே போங்க.. முக்கிய வீரர் உட்பட பலரை துரத்திய கோலி.. மீட்டிங்கில் பொங்கிய கேப்டன்.. மர்மம்!?

பெங்களூர்: 2021 ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் பெங்களூர் அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.

2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஐபிஎல் அணிகள் தங்கள் அணியிலிருந்து முக்கியமான வீரர்களை ரிலீஸ் செய்தது.

பல வீரர்கள் ரீடெயின் செய்யப்பட்ட நிலையில் சில வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டனர். இதனால் இந்த முறை ஐபிஎல் மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலம்

ஏலம்

2021 ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் பெங்களூர் அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளனர். அதிக வீரர்களை நீக்கிய அணிகளில் ஒன்றாக பெங்களூர் அணி உள்ளது. கடந்த சீசனில் பெங்களூர் அணி நினைத்ததை விட சிறப்பாக ஆடியது. இதனால் அந்த அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

வீரர்கள்

வீரர்கள்

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெங்களூர் அணி நிறைய வீரர்களை வெளியே அனுப்பி உள்ளது. பெங்களூர் அணியில் இருந்து 9 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஆரோன் பின்ச், உமேஷ் யாதவ், மெயின் அலி , சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், டெல் ஸ்டெயின், உடானா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

கோபம்

கோபம்

பெங்களூர் அணி இப்படி அதிக வீரர்களை நீக்கியது ஏன் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. உமேஷ் யாதவ் கடந்த சில வருடங்களாகபெங்களூர் அணியில் சரியாக பந்து வீசவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஸ்டெயின் பார்மில் இல்லாததால் அவரும் நீக்கப்பட்டுள்ளார்.

கோலி எப்படி

கோலி எப்படி

ஆனால் உடனா, பின்ச் நீக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. அதேபோல் துபேவும் நீக்கப்பட்டது ஆச்சர்யம் அளிக்கிறது. இவர்களை நீக்குவதில் ஆர்சிபி கேப்டன் கோலிதான் முக்கிய பங்கு வகித்தார்.இவர்தான் நேற்று மீட்டிங்கில் ஆர்சிபி அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

நீக்கம்

நீக்கம்

யாரை எல்லாம் நீக்க வேண்டும் என்பதில் கோலி நேற்று தெளிவாக இருந்துள்ளார். மீட்டிங்கில் இவர் நேற்று மிகவும் கோபமாக காணப்பட்டுள்ளார். பல வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்ற கோபத்தில் இவர் இருப்பதாக தெரிகிறது.

அதிரடி வீரர்கள்

அதிரடி வீரர்கள்

இதனால் அதிரடி ஓப்பனர், ஆல் ரவுண்டர்களை களமிறக்கி ஆர்சிபியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல கோலி முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாகவே பெங்களூர் அணியில் முக்கியமான வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் பெங்களூர் அணி நிறைய வீரர்களை, முக்கியமாக வெளிநாட்டு வீரர்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 21, 2021, 11:00 [IST]
Other articles published on Jan 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+