For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாட் அவுட்.. ஸ்மித்திற்கு தவறாக கொடுக்கப்பட்ட விக்கெட்.. ரிவ்யூ எடுக்காமல் போனது ஏன்? என்ன நடந்தது?

சென்னை; இந்தியாவிற்கு எதிராக எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்த ஸ்மித் அந்த விக்கெட்டிற்கு ரிவ்யூ எடுக்காமல் போனது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி பைனல் மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் பேட்டிங் மெதுவாக ஆடிய இந்திய அணி தற்போது பவுலிங்கில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது.

ஆஸ்திரேலியா பேட்டிங்: இந்த போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணியும் திணறி வருகிறது. முக்கியமாக இரண்டாவது ஓவரிலேயே ஷமி வார்னர் விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை ஷமி எடுத்தார்.

 Why Smith did not review after being not out for Australia against India in 2023 World Cup Finals?

அடுத்து பும்ரா பந்தில் மிட்சல் மார்ஷ் அவுட் ஆனார். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஸ்மித் மட்டும் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய விக்கெட்டையும் பும்ரா எடுத்தார். எல்பிடபிள் முறையில் ஸ்மித் அவுட் ஆனார். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது.. ஸ்மித் அதற்கு ரிவ்யூ எடுக்கவில்லை.

எதிரே இருந்தே ஹெட்டிடம் அவர் ரிவ்யூ எடுக்கலாமா என்று கேட்டார். ஆனால் அவர் கண்டிப்பாக இது விக்கெட்தான் எடுக்க வேண்டாம் என்று கூறினார். இதனால் அவர் எடுக்காமல் சென்றார். இந்த விக்கெட் பார்க்க பிளம் போல இருந்தது.

அதனால் ஸ்மித் ரிவ்யூ எடுக்கவில்லை. ஆனால் ரிப்ளேயில் அது விக்கெட் இல்லை. இம்பாக்ட் அவுட் சைட் என்பது தெரிந்தது. அதோடு பந்து ஸ்டம்பில் படவில்லை. இந்த ரிப்ளே இணையம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

( இந்தியாவிற்கு சிக்கலாக மாறியதே.. இந்த ஒரு வீரர்தான்! இந்த வீடியோவை பாருங்க புரியும்! டிரெண்டிங் மீம்)

இந்தியா பேட்டிங்; முன்னதாக தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.

இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர். இதனால் 50 ஓவருக்கு 240 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.

 Why Smith did not review after being not out for Australia against India in 2023 World Cup Finals?

அணி விவரம்: இந்திய அணி மாற்றம் இல்லாமல் அதே அணியுடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, கில், விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , கே எல் ராகுல் (கீப்பர்) , சூர்யகுமார் யாதவ் , ரவீந்திர ஜடேஜா , முகமது ஷமி , ஜஸ்பிரிட் பும்ரா , குல்தீப் யாதவ் , முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். அதே அணியுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இன்று இந்திய அணியில் உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளை விட வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி டீமை மாற்றவே இல்லை.

இன்று மேட்சில் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. சிராஜுக்கு பதிலாக அஸ்வின் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிராஜ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.

Story first published: Sunday, November 19, 2023, 19:17 [IST]
Other articles published on Nov 19, 2023
English summary
Why Smith did not review after being not out for Australia against India in 2023 World Cup Finals?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+