For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அழுத்தம்.. தோனியை தப்பா பேசிட்டு ஐபிஎல் விளையாடிட முடியுமா?.. நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த்.. என்ன நடந்தது?

சென்னை: ஐபிஎல் ஏலத்திற்கான வீரர்களின் லிஸ்டில் ஸ்ரீசாந்தை எடுக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில் விளையாடலாம் என்று ஆர்வமாக இருந்த ஸ்ரீசாந்த் பெயர் தற்போது ஏலம் விடபடும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 1114 வீரர்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த ஏலத்திற்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது . மொத்தம் 290 வீரர்கள் இந்த ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் 164 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். 123 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள்.

ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த்

இந்த நிலையில் இவரை ஐபிஎல் ஏலத்திற்கான வீரர்களின் லிஸ்டில் ஸ்ரீசாந்தை எடுக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் விஷயம் இவரின் வயது. இவருக்கு 39 வயதாகிறது. 8 வருடமாக கிரிக்கெட் ஆடவில்லை. இதனால் டச் இல்லை.

காரணம்

காரணம்

அதேபோல் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவரின் ஆட்டம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் எல்லாம் இல்லை. இதன் காரணமாக இவர் மீது ஐபிஎல் அணிகள் பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை. இதன் பொருட்டே தற்போது இவரின் பெயர் ஐபிஎல் ஏலத்திற்கு தேர்வாகவில்லை என்கிறார்கள்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அதேபோல் இவரை ஐபிஎல் அணிகள் எடுக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் அணிகள் எதுவும் இவரை அணியில் சேர்க்க விரும்பவில்லை. ஸ்ரீசாந்த் அதிகம் கோபம் அடைவார். இவர் அணிக்குள் வந்தால் டிரெஸ்ஸிங் ரூம் நன்றாக இருக்காது.

எப்படி

எப்படி

சக வீரர்களிடம் சண்டை போடுவார். இதெல்லாம் சரிப்பட்டு வராது. அதனால் இவரை எதற்கு தேவையின்றி காசு கொடுத்து எடுக்க வேண்டும் என்று கருதி உள்ளனர். இதுவும் கூட இவரின் பெயரை ஏலம் விடும் வீரர்களின் லிஸ்டில் சேர்க்காமல் போனதற்கு காரணம் ஆகும்.

தோனி

தோனி

இன்னொரு பக்கம் தோனி, கோலி போன்ற வீரர்களை ஸ்ரீசாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இப்படி இருக்கும் போது அவருக்கு எப்படி ஐபிஎல்லில் இடம் கிடைக்கும். மூத்த வீரர்களை விமர்சனம் செய்தால் யார் வாய்ப்பு கொடுப்பார். அவர் 2013ல் தடை பெற்ற போதே அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது.

 வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இனியும் கிரிக்கெட் ஆடுவேன் என்ற நம்பிக்கையில் ஸ்ரீசாந்த் இருக்க கூடாது. ஸ்ரீசாந்த் இடையில் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் எல்லாம் நின்றார். அதுபோல் அவர் வேறு விஷயங்களில் இனி கவனம் செலுத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Story first published: Friday, February 12, 2021, 22:53 [IST]
Other articles published on Feb 12, 2021
English summary
Why Kerala Player Sreesanth registration does not get the nod for IPL Mini Auction 2021?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+