For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி!

Recommended Video

WORLD CUP 2019 BAN VS WI | மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

டாண்டன் : வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரில் மீண்டும் ஒரு அபார வெற்றி பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் மோதிய 2019 உலகக்கோப்பை லீக் போட்டி டாண்டன் நகரில் நடைபெற்றது. இரு அணிகளுக்குமே இது முக்கிய போட்டியாக இருந்தது. அரையிறுதி செல்ல வேண்டும் என்றால், இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஆடியது வங்கதேசம்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கெயில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக அடி கை கொடுத்தனர். லீவிஸ் 70, ஹோப் 96, பூரன் 25, ஹெட்மயர் 50 என் ரன் குவித்தனர். ஹோல்டர் அதிரடியாக 33 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 321 ரன்கள் எடுத்தது.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

இந்த இலக்கு வங்கதேச அணிக்கு பெரிதாக இருக்கும் என கருதப்பட்டது. இங்கிலாந்து அணியிடம் வங்கதேசம் 300க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சரணடைந்து இருந்தது. அதே போல, வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வங்கதேசம் மாட்டிக் கொள்ளும் என கருதப்பட்டது.

வங்கதேச துவக்கம்

வங்கதேச துவக்கம்

வங்கதேச அணியின் துவக்க ஜோடி சௌம்யா சர்க்கார் - தமிம் இக்பால் 52 ரன்கள் சேர்த்தனர். சௌம்யா சர்க்கார் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் தமிம் 48 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார்.

ஷகிப் சதம்

ஷகிப் சதம்

ஷகிப்அல் ஹசன் இங்கிலாந்து போட்டியை தொடர்ந்து, இந்தப் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 99 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்தார் ஷகிப். ரஹீம் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த லிட்டன் தாஸ் ஷகிப்புடன் பலமான கூட்டணி அமைத்தார்.

லிட்டன் தாஸ் மிரட்டல்

லிட்டன் தாஸ் மிரட்டல்

இவர்கள் இருவரும் அமைத்த பலமான கூட்டணியை வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சால் பிரிக்க முடியவில்லை. லிட்டன் தாஸ் முதலில் நிதானமாக ஆடி வந்தார். பின்னர் அவர் அதிரடியை கூட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி திக்கு முக்காடிப் போனது.

வங்கதேசம் வெற்றி

வங்கதேசம் வெற்றி

322 என்ற பெரிய இலக்கை 41.3 வது ஓவரிலேயே வென்று வரலாறு படைத்தது வங்கதேசம், இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வங்கதேசம்.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

வங்கதேசம் வெற்றி பெற மிக முக்கிய காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான பந்துவீச்சு. அந்த அணி எந்த நேரத்திலும், வங்கதேச அணியை அச்சுறுத்தவில்லை. குறைந்த பட்சம் காட்ரேல் ஓவருக்கு 6.50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 6.88ரன்களும் கொடுத்து இருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் 7, 8 என்ற அளவில் ரன்களை வாரி இறைத்தனர்.

Story first published: Monday, June 17, 2019, 23:55 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
WI vs BAN Cricket World cup 2019 : West Indies vs Bangladesh match result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+