Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

46 ஆண்டுகளில் இப்படி ஒரு பவுலிங்கை யாரும் செய்ததில்லை.. அரண்டு போன வங்கதேசம்.. ஜேடன் ஸீல்ஸ் அபாரம்

ஜமைக்கா: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேடன் ஸீல்ஸ் கடந்த 46 ஆண்டுகளில் மிக சிக்கனமான டெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்தார். அவர் முதல் இன்னிங்ஸில் 15.5 ஓவர்கள் பந்து வீசி அதில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 0.30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார்.

இந்த போட்டியில் வங்கதேச அணி 164 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடரில் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருந்தது.

wi vs ban jayden seales west indies

பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் ஜமைக்கா மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அதிலும் ஜேடன் ஸீல்ஸ் ஓவர்களில் ரன் குவிக்காமல் மெய்டனாக ஆடினார்கள்.

71.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்கதேச அணி 164 ரன்கள் மட்டும் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 64 ரன்கள் சேர்த்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 36 ரன்கள் சேர்த்தார். ஜேடன் ஸீல்ஸ் 15.5 ஓவர்களில் 10 மெய்டன் ஓவர்கள் வீசினார். மேலும், 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். கடந்த 46 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே மிக சிக்கனமான பந்துவீச்சு ஆகும்.

ஷமர் ஜோசப் 3 விக்கெட்களும், ரோச் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அல்சாரி ஜோசப் 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து முதல் இன்னிங்க்ஸ் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Story first published: Monday, December 2, 2024, 12:01 [IST]
Other articles published on Dec 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+