Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் முதல் பாக்.வீரர் வரை கோலிக்கு பாராட்டு.. பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொன்ன கங்குலி.. விவரம்

மெல்போர்ன் : டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி ஆடிய இன்னிங்ஸ் தான் அவர் வாழ்நாளில் சிறந்த ஆட்டம் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. 8 பந்தில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது 19வது ஓவரில் விராட் கோலி 2 சிக்சர் விளாசியதன் மூலம், ஆட்டத்தை விராட் கோலி இந்தியாவின் பக்கம் கொண்டு வந்ததுடன், கடைசி கட்டத்திலும் வெற்றியை தேடி தந்தார்.

சச்சின் பாராட்டு

சச்சின் பாராட்டு

இது குறித்து பாராட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, உங்கள் வாழக்கையில் சிறந்த இன்னிங்ஸ் என்றால் இது தான். உங்களுடைய ஆட்டம் எங்களுக்கு விருந்து போல் இருந்தது. 19வது ஓவரில் ஹாரிஸ் ரவுஃப்க்கு எதிராக நீங்கள் பேக் ஃபுட்டில் அடித்த சிக்சர் எனக்கு பிரமிப்பை கொடுத்தது. இதே போன்று தொடர்ந்து விளையாடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சீரஞ்சிவி, நீரஜ் வாழ்த்து

சீரஞ்சிவி, நீரஜ் வாழ்த்து

இதனைத் தொடர்ந்து டிவிட்டரில் பாராட்டியுள்ள இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன், நீரஜ் சோப்ரா, ரசிகர்கள் கிங் கோலி என்று ஒரு காரணத்தோடு தான் அழைக்கிறார்கள். இந்தியாவின் சிறந்த வெற்றி இது என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு சீனிமாவின் சூப்பர் ஸ்டாரான சீரஞ்சிவி, எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தீபாவளி அனுபவத்தை கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு தலை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெயரை குறிப்பிடாத கங்குலி

பெயரை குறிப்பிடாத கங்குலி

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இது சிறந்த தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ள கங்குலி, விராட் கோலியின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இதே போன்று அதிரடி வீரர் சேவாக் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நான் பார்த்ததிலேயே சிறந்த டி20 இன்னிங்ஸ் இது தான். இது சிறந்த தீபாவளி என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

முகமது ஹபீஸ் வாழ்த்து

முகமது ஹபீஸ் வாழ்த்து

யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கிங் கோலி திரும்ப வந்துவிட்டார் என்று பாராட்டியுள்ளார். அஸ்வின் கடைசி கட்டத்தில் கூலாக நின்று கடைசி பந்தை எதிர்கொண்டதாகவும் பாராட்டியுள்ளார். விராட் கோலியை பாராட்டியுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ், பாகிஸ்தான் தோல்வி குறித்து கவலை இல்லை. நீங்கள் உங்களால் இயன்ற அளவு முயற்சி செய்துள்ளீர்கள். ஸ்பெஷல் வீரரிடமிருந்து, ஸ்பெஷஸ் இன்னிங்ஸ் வந்துள்ளது என்று பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, October 24, 2022, 10:28 [IST]
Other articles published on Oct 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+