Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அயர்லாந்துக்கு லந்தைக் கொடுத்த ஓமன்... 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!

தரம்சலா: பெரிய பெரிய அணிகள் விளையாடுவதைக் காட்டிலும் இந்தக் குட்டி அணிகள் மோதும் போட்டிகளில்தான் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும். பலவீனமானவர்களாக இருந்தாலும் கூட கடைசி வரை விடாமல் மல்லுக்கட்டுவார்கள். அந்த வகையில், ஓமன் - அயர்லாந்து இடையிலான நேற்றையே உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டி செம விறுவிறுப்பாக இருந்தது.

வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட அயர்லாந்து அணியை, அதை விட பலவீனமான புதுமுக அணியான ஓமன் அலேக்காக வென்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 2 விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியில் ஓமன் வெற்றி பெற்றது.

அருமையான பேட்டிங்கை நேற்று வெளிப்படுத்தியது ஓமன். குரூப் ஏ பிரிவில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டி இது.

கடினமான இலக்கை நோக்கி

கடினமான இலக்கை நோக்கி

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 154 ரன்களை எடுத்திருந்தது. ஓமன் புதுமுக அணி என்பதாலும், அயர்லாந்து அனுபவம் வாய்ந்த அணி என்பதாலும் நிச்சயம் அந்த அணியே வெல்லும என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அழகான பேட்டிங்

அழகான பேட்டிங்

ஆனால் ஓமன் அணி அசத்தி விட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜீசன் மக்சூத் 33 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். கவார் அலி 26 பந்துகளில் 34 ரன்களைக் குவித்தார். 9 ஓவர்களில் அந்த அணி 69 ரன்களைக் குவித்து விட்டது.

டிவிஸ்ட் கொடுத்த கெவின் ஓ பிரையன்

டிவிஸ்ட் கொடுத்த கெவின் ஓ பிரையன்

இந்த நிலையில் கெவின் ஓ பிரையன் இந்த ஜோடியை அடுத்தடுத்து காலி செய்தார். இதனால் ஆட்டம் மீண்டும் அயர்லாந்து பக்கம் வந்தது. ஒரு முனையில் ஓமன் வீரர் ஜதீந்தர் சிங் 26 பந்துகளில் 24 ரன்களைக் குவித்தார்.

அட்டகாசமாக ஆடிய ஆமீர் அலி

அட்டகாசமாக ஆடிய ஆமீர் அலி

ஆனால் கடைசிக் கட்டத்தில் ஓமன் வீரர் ஆமிர் அலி அசத்தி விட்டார். அதிரடியாக ஆடிய அவர் 16 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கம். கடைசி ஓவரில் ஓமன், அயர்லாந்தை அயர வைத்து விட்டது.

14 ரன்கள் தேவை

14 ரன்கள் தேவை

கடைசி ஓவரில் ஓமனுக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரைப் போட்டவர் மேக்ஸ் சோரன்சன். சொதப்பலாக இவர் பந்து வீசியதும், அயர்லாந்து வீரர்கள் மோசமாக பீல்டிங் செய்ததாலும், ஓமனுக்கு அதிர்ஷ்டம் இருந்ததாலும் அந்த ஓவரை மிகத் திறமையாக சமாளித்து வெற்றியைப் பெற்றது ஓமன்.

Story first published: Friday, March 11, 2016, 14:00 [IST]
Other articles published on Mar 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+