Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யாவத்தான் முதல்ல அனுப்பியிருக்கணும்... அவர் பவர்ப்ளேவை சிறப்பா பயன்படுத்தியிருப்பாரு

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி கொண்டுள்ளது.

Recommended Video

வாய்ப்பை தவற விட்ட Murugan Ashwin | MI Bowler-களை கதற விட்ட Ravi Bishnoi | IPLT20 | Oneindia Tamil

இந்த போட்டியின் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவை 3வது இடத்தில் விளையாட அனுப்பியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

17வது போட்டி

17வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் 17வது போட்டி நேற்றைய தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற்றத்துடனான பேட்டிங்கை அளித்து 131 ரன்களில் சுருண்டது.

சிறப்பான சூர்யா

சிறப்பான சூர்யா

அந்த அணியின் டீ காக் அவுட்டானவுடன் சூர்யகுமார் யாதவிற்கு பதலாக இஷான் கிஷன் சோதனை முயற்சியாக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் ஒற்றை இலக்க ரன்னில் ரவி பிஸ்னோயிடம் வீழ்ந்தார். இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்களை குவித்தார்.

சூர்யாவை களமிறக்கியிருக்க வேண்டும்

சூர்யாவை களமிறக்கியிருக்க வேண்டும்

இந்நிலையில் சூர்யகுமார் யாதவை 3வது வீரராக களமிறக்கியிருந்தால் அவர் பவர்ப்ளேவை சிறப்பாக பயன்படுத்தி மேலும் ரன்களை அடித்திருப்பார் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். பவர்ப்ளேவில் மொத்தமாக ஒரேயொரு பவுண்டரியை மட்டுமே மும்பை அணி நேற்றைய போட்டியில் அடித்திருந்தது. மேலும் மொத்தமாக இந்த ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே வீரர்கள் அடித்திருந்தனர்.

67 ரன்கள்

67 ரன்கள்

கடந்த 4 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 67 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் இஷான் கிஷன், அவரை நம்பி நேற்றைய போட்டியில் முன்னதாக களமிறக்கியது தவறான முடிவு என்றும் சேவாக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கியிருந்தால் அரைசதத்தை அடித்திருப்பார் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.

சூர்யா அதிரடி பார்ட்னர்ஷிப்

சூர்யா அதிரடி பார்ட்னர்ஷிப்

நேற்றைய போட்டியில் 17 பந்துகளில் இஷான் கிஷன் 6 ரன்களை மட்டுமே அடித்து அவுட்டானார். மாறாக சூர்யகுமார் யாதவ் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து 79 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் அடித்திருந்தார். குறைவான ரன்களை அடித்ததே நேற்றைய போட்டியில் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Saturday, April 24, 2021, 20:42 [IST]
Other articles published on Apr 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+