Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2026: மீண்டும் பைனலில் ஆர்சிபி.. ஸ்மிருதி மந்தனா அதிரடியால் சரிந்த உ.பி வாரியர்ஸ்

மும்பை: 2026 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, இந்த வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உ.பி வாரியர்ஸ் அணிக்குத் துவக்க வீராங்கனைகள் தீப்தி சர்மா மற்றும் கேப்டன் மெக் லானிங் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது. தீப்தி சர்மா 43 பந்துகளில் 55 ரன்களும், மெக் லானிங் 30 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர்.

WPL 2026 Smriti Mandhana Leads RCB to WPL 2026 Final Dominant 8-Wicket Win Over UP Warriorz

நாடின் டி கிளெர்க் பவுலிங்

எனினும், பெங்களூரு வீராங்கனை நாடின் டி கிளெர்க் வீசிய துல்லியமான பந்துவீச்சால் உ.பி அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் உ.பி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மின்னல் வேக சேசிங்

144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அதிரடி ஆட்டம் ஆடினர். உ.பி பந்துவீச்சாளர்களைத் திணறடித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டிற்கு 54 பந்துகளில் 108 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தது.

கிரேஸ் ஹாரிஸ் 37 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 75 ரன்கள் விளாசினார். மறுமுனையில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 13.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆர்சிபி இறுதிப்போட்டிக்குத் தகுதி

இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. மறுபுறம், தோல்வியடைந்த உ.பி வாரியர்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Story first published: Friday, January 30, 2026, 9:38 [IST]
Other articles published on Jan 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+