WPL 2027: மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அணி வாரியாக வாங்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல்
கொச்சி: 2027 WPL மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் மொத்தம் 25 வீராங்கனைகள் ஐந்து அணிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் அதிகபட்ச விலைக்கு ஏலம் போயுள்ளார். அவரை ரூ. 1.10 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஏலத்தில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான விலைக்கு ஏலம் போன ஒரே வீராங்கனை இவர்தான்.
இந்திய வீராங்கனை கிரண் நவ்கிரே ரூ. 75 லட்சத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்த ஏலத்தில் ரூ. 50 லட்சத்தைத் தாண்டிய மற்றொரு வீராங்கனை இவர் மட்டுமே ஆவார். 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வழிவகுத்த சோஃபி மோலினக்ஸ், ரூ. 50 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் பங்கேற்றார்.

அவரை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் யுபி வாரியர்ஸ் அணி அவரை கைப்பற்றியது. யுபி வாரியர்ஸ் அணி மோலினக்ஸ் தவிர்த்து இந்திய விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மா, ஆல்ரவுண்டர் சினே ராணா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோரை தலா ரூ. 30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது.
இதனிடையே, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜி கமலினியை ரூ. 40 லட்சத்திற்கும், அயர்லாந்து ஆல்ரவுண்டர் ஓர்லா ப்ரெண்டர்காஸ்டை ரூ. 30 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்தது.
அணி வாரியாக தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் பட்டியல்: மும்பை இந்தியன்ஸ்- ஸ்வேதா செஹ்ராவத் - ரூ. 20 லட்சம், திஷா கசாத் - ரூ. 10 லட்சம், லதிகா இனாம்தார் - ரூ. 10 லட்சம், பாரதி ராவல் - ரூ. 10 லட்சம், சனிகா சல்கே - ரூ. 10 லட்சம், அக்சிதா பகத் - ரூ. 10 லட்சம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: கிரண் நவ்கிரே - ரூ. 75 லட்சம், உமா காஷ்வி - ரூ. 10 லட்சம், கிர்ஸ்டி கார்டன் - ரூ. 10 லட்சம், நஜ்மா கான் - ரூ. 10 லட்சம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஜெஸ் ஜோனாசென் - ரூ. 40 லட்சம், தேஜல் ஹசப்னிஸ் - ரூ. 30 லட்சம், க்ளோய் டிரையான் - ரூ. 30 லட்சம், விருந்தா தினேஷ் - ரூ. 10 லட்சம்.
யுபி வாரியர்ஸ்: சோஃபி மோலினக்ஸ் - ரூ. 1.10 கோடி, சினே ராணா - ரூ. 30 லட்சம், கிரேஸ் ஹாரிஸ் - ரூ. 30 லட்சம், சுஷ்மா வர்மா - ரூ. 30 லட்சம், ஆஷா சோபனா - ரூ. 30 லட்சம், கேத்ரின் பிரைஸ் - ரூ. 10 லட்சம், மனாலி தக்ஷிணி - ரூ. 10 லட்சம், சஹானா பவார் - ரூ. 10 லட்சம்.
குஜராத் ஜெயண்ட்ஸ்: ஜி கமலினி - ரூ. 40 லட்சம், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் - ரூ. 30 லட்சம், சமீரா ராகவ் - ரூ. 10 லட்சம்.


Click it and Unblock the Notifications


