Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2027 ஏலம்: மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய வீராங்கனைகள் பட்டியல்.. முழு அணி விவரம்

கொச்சி: மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி சர்வதேச போட்டிகளில் விளையாடாத 6 இளம் இந்திய வீராங்கனைகளை மொத்தம் ரூ. 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இரண்டு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்திற்கு முன்பாக 11 வீராங்கனைகளைத் தக்கவைத்து, வர்த்தக முறையில் யுபி வாரியர்ஸ் அணியிலிருந்து அமெரிக்க வீராங்கனை தாரா நாரிஸை வாங்கியிருந்தது.

ரூ. 90 லட்சம் கையிருப்புத் தொகையுடன் கொச்சியில் நடைபெற்ற ஏலத்தில் களமிறங்கிய மும்பை அணி, அணியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் இளம் இந்திய வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது.ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் முதன்முதலாகத் தேர்வு செய்யப்பட்டவர் தொடக்க ஆட்டக்காரரான திஷா கசாத் ஆவார். இவர் ரூ. 10 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.

WPL 2027 MI

தொடர்ந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் லதிகா இனாம்தார் ரூ. 10 லட்சம், சுழற்பந்து வீச்சாளர் பாரதி ராவல் ரூ. 10 லட்சம், பேட்டர் சனிகா சால்கே ரூ. 10 லட்சம் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சிதா பகத் ரூ. 10 லட்சம் என அனைவரும் குறைந்தபட்ச அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டனர். முன்னதாக யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய இளம் பேட்டர் ஷ்வேதா ஷெராவத்தை ரூ. 20 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

WPL 2027: லேடி வைபவ் சூர்யவன்ஷி.. 15 வயதில் உமா காஷ்வி மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் சாதனை

WPL 2027: லேடி வைபவ் சூர்யவன்ஷி.. 15 வயதில் உமா காஷ்வி மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் சாதனை

WPL 2027 ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்மன்பிரீத் கவுர், அமன்ஜோத் கவுர், ரஹிலா பிர்தௌஸ், எஸ். சஜனா, சமஸ்கிருதி குப்தா, வைஷ்ணவி சர்மா, ஹேலி மேத்யூஸ், அமெலியா கெர், நாட் ஸ்கைவர்-பிரன்ட், நிகோலா கேரி மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் ஆகிய 11 வீராங்கனைகளைத் தக்கவைத்திருந்தது. வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்க வீராங்கனை தாரா நாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

WPL 2027: மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீராங்கனைகள் பட்டியல்

Also Read

WPL 2027: மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீராங்கனைகள் பட்டியல்

WPL 2027 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் முழு விவரம்: ஹர்மன்பிரீத் கவுர், அமன்ஜோத் கவுர், ரஹிலா பிர்தௌஸ், எஸ். சஜனா, சமஸ்கிருதி குப்தா, வைஷ்ணவி சர்மா, ஹேலி மேத்யூஸ், அமெலியா கெர், நாட் ஸ்கைவர்-பிரன்ட், நிகோலா கேரி, ஷப்னிம் இஸ்மாயில், தாரா நாரிஸ், திஷா கசாத், லதிகா இனாம்தார், பாரதி ராவல், சனிகா சால்கே, ஷ்வேதா ஷெராவத், அக்சிதா பகத்.

Story first published: Wednesday, October 28, 2026, 21:03 [IST]
Other articles published on Oct 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+