Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கீப்பர் இடத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்ட பண்ட்.. புலம்பும் சாஹா.. இங்கிலாந்து தொடர் குறித்து ஆதங்கம்

இங்கிலாந்து சுற்றுப்யணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என விருதிமான் சஹாவே வெளிப்படையாக கூறியுள்ளார்.

Recommended Video

India அணியில் சேர்க்கப்பட்ட புதிய Wicket Keeper.. யார் இந்த KS Bharat ?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதற்காக வரும் ஜூன் 2ம் தேதி முதல் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இந்த தொடரில் விக்கெட் கீப்பிங் துறையில் ரிஷப் பண்ட் மற்றும் சாஹா இடையே போட்டி நிலவிய நிலையில் பண்ட்-க்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என சாஹா கூறியுள்ளார்.

 விக்கெட் கீப்பிங் இடம்

விக்கெட் கீப்பிங் இடம்

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணியில் அவருக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பர் உறுதியாகவில்லை. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் இருந்த போதும் முதலில் சாஹா தான் இந்திய அணியின் முதல் தேர்வாக இருந்தது. இதற்கு காரணம் அவரின் பேட்டிங் திறமை.

இடத்தை நிரப்பிய பண்ட்

இடத்தை நிரப்பிய பண்ட்

202ம் ஆண்டில் விருதிமான் சஹா காயத்தால் பாதிக்கப்பட்ட போது அந்த இடத்தை ரிஷப் பண்ட் நிரப்பி வந்தார். ஆனால் தற்போது அவர் நிரந்தரமாக சாஹாவின் இடத்தை பிடித்துவிட்டார். 2020-ல் ஆஸ்திரேலிய தொடரில் சாஹா தான் முதல் டெஸ்ட் போட்டியில் கீப்பிங் செய்தார். ஆனால் அவர் பேட்டிங்கில் சொதப்பியதால் அதற்கு அடுத்த போட்டியில் இருந்து ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு போனது. அதனை பக்காவாக பயன்படுத்திக்கொண்ட ரிஷப் பண்ட் இன்று வரை இந்திய அணியின் முதல் தேர்வாக உள்ளார்.

சஹா கருத்து

சஹா கருத்து

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாஹா மற்றும் பண்ட் இருவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் பண்ட்- தான் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள சாஹா, ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபில் சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே அவர் தான் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதல் தேர்வாக இருப்பார். நான் எனக்கான வாய்ப்புகாக காத்திருப்பேன். அப்படி ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அந்த ஒரு வாய்ப்புகாக தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.

விரக்தி

விரக்தி

நான் அனைத்து சூழல்களிலும் ஒரே மாதிரி தான் உள்ளேன். நான் சிறப்பாக ஆடும் போதும் சரி, சொதப்பும் போதும் சரி, என்னுள் எந்த மாற்றத்தையும் நான் உணரவில்லை. மற்றவர்கள் கூறுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. நம்மால் முயற்சி செய்ய தான் முடியும், சில சமயங்களில் அது சரியாக அமையும், சில சமயங்களில் சொதப்பி விடும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Friday, May 21, 2021, 20:09 [IST]
Other articles published on May 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+