ஜேசா ஹமேஷா டால்த்தா ஹை,..வைசே டால்னா..!! ரோகித்தின் அந்த வார்த்தையை புகழும் இளம்வீரர்.. ஏன்?
Recommended Video
மும்பை: முதன் முறையாக சர்வதேச இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து பேசிய இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார், ரோகித் சர்மாவை வானளாவ புகழ்ந்து தள்ளியுள்ளார்.
உலக கோப்பை தொடரை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய அணி. அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மொத்தம் 8 போட்டிகளில் ஆட இருக்கிறது.அந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை சில நாட்களுக்கு முன்பாக தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வெளியிட்டார்.
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு என தனித்தனியே வெளியிட்டார். அதில் ராகுல் சஹார், நவ்தீப் செயலி, கலீல் அஹமது ஆகிய புதுமுகங்கள் இடம் பெற்றனர். ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே போன்ற வீரர்களுக்கு அணியில் இடமளிக்கப்பட்டது.

ஐபிஎல் மும்பை அணி
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு சுழற் பந்து வீச்சில் அசத்தியவர் இளம் வீரர் ராகுல் சஹார். அவர் தற்போது முதல் முறையாக சர்வதேச தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். டி20 அணியில் இடம்பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

தூங்கிட்டு இருந்தேன்
இது குறித்து அவர் முதல்முறையாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அப்போது நான் அப்போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். எனது மொபைல் போனில் தொடர்ந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது. பிறகு பார்த்த போது, ஒரே வாழ்த்து மழையாக இருந்தது. அத்தனை மெசேஜ்கள் நிரம்பி இருந்தன.

அது பற்றி சிந்திப்பேன்
அதன் பிறகு தான் எனக்கு தெரிந்தது... நான் இந்திய அணியில் இடம் பெற்று உள்ளேன் என்று. எப்போதுமே அன்றைய தினம் என்ன நடக்கிறது என்பதை பற்றி தான் சிந்திப்பேன். இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்ததால், அது குறித்து மட்டுமே யோசித்து கொண்டிருந்தேன்.

மகிழ்ச்சி
இந்த தொடரில் நன்றாக செயல்பட வேண்டும். திடீரென இந்திய அணியில் இடம் கிடைத்த போது என்ன செய்வதென்றே புரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்ற வீரர்களும் அன்று முழுவதும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டே இருந்தனர். நிச்சயம் கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி நிரூபிப்பேன் என்றார்.

ரோகித் புகழ்
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியவர் சஹார். அது தவிர தோனியின் புனே ரெட் ஜெயண்ட்ஸ் அணியிலும் இருந்தவர். மும்பை அணியில் இருந்தது குறித்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார் அவர். ரோகித்தின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளியிருக்கும் அவர், ஐபிஎல் பைனல் குறித்து பேசியிருக்கிறார்.

மறக்க முடியாத பைனல்
அவர் கூறியதாவது: ஐபிஎல் 2019 பைனல் ஆட்டத்தை மறக்க முடியாது. என் மேல் நம்பிக்கை வைத்து தான் 17வது ஓவரை வீசுமாறு கூறினார். ஜேசா ஹமேஷா டால்டா ஹை, வைசே டால்னா (எப்போதும் பந்து வீசுவது போல், இப்போதும் பந்துவீச) என்று ரோகித் அண்ணா என்னிடம் கூறினார்.

நன்றி சொல்கிறேன்
அந்த தருணத்தை மறக்க முடியாது. மற்ற ஓவர்களை போல இல்லாமல் சிறப்பாக அந்த ஓவரை வீசினேன். என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பிக்கை அளித்தவர்கள் ரோகித் சர்மாவும், ஜாகீர் கானும். அவர்களுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications