Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிடைச்ச வாய்ப்பை பச்சக்குன்னு பிடிச்சுக்கிட்ட இளம் வீரர்... பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிறப்பான பௌலர்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் முருகன் அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர் பிஸ்னோய் இணைக்கப்பட்டிருந்தார்.

17வது போட்டி

17வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் 17வது போட்டி இன்றைய தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான இந்த போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி அணி பேட்டிங் செய்தது.

ரோகித் சிறப்பு

ரோகித் சிறப்பு

முதலில் திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இதையடுத்து அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்கள் அடக்கம். அவருக்கு இணையாக சூர்யகுமார் யாதவும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.

2 விக்கெட்டுகளை வீழ்த்திய பிஸ்னோய்

2 விக்கெட்டுகளை வீழ்த்திய பிஸ்னோய்

இந்த போட்டியில் துவக்க வீரர் குவின்டன் டீ காக் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இஷான் கிஷனையும் 6 ரன்களில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் இளம் வீரர் ரவி பிஸ்னோய். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தினார். கடந்த போட்டிகளில் பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருந்த இவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

21 ரன்கள்... 2 விக்கெட்டுகள்

21 ரன்கள்... 2 விக்கெட்டுகள்

அணியின் முருகன் அஸ்வினுக்கு பதிலாக ரவி பிஸ்னோய் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளார். அதற்கு நியாயம் செய்யும் வகையில் அவர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Friday, April 23, 2021, 21:14 [IST]
Other articles published on Apr 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+