For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயோ சிஎஸ்கேவா? வேண்டவே வேண்டாம்.. தெறிச்சு ஓடும் இளம் வீரர்கள்.. பரபரக்கும் ஐபிஎல் 2021 ஏலம்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு மட்டும் சென்றுவிட கூடாது என்பதில் சில இளம் வீரர்கள் உறுதியாக உள்ளனர்.

2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யப்பட வேண்டிய வீரர்களை எல்லா அணிகளும் ரிலீஸ் செய்துவிட்டது.

சிஎஸ்கே அணியில் இருந்தும் கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

 சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு மட்டும் சென்றுவிட கூடாது என்பதில் சில இளம் வீரர்கள் உறுதியாக உள்ளனர். 2021 ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. ஆனால் இளம் வீரர்கள் சிஎஸ்கே மீது பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை.

ஆர்வம்

ஆர்வம்

சிஎஸ்கே அணியில் எடுக்கப்படும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை. ஏலத்தில் எடுத்தாலும் ஆடும் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. தீபக் சாகர், கெய்க்வாட் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே சிஎஸ்கே அணி மூலம் அடையாளம் பெற்ற வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாவம்

பாவம்

சிஎஸ்கேவில் இருந்த ஜெகதீசன், பாபா அபராஜித், மோனு சிங், சாய் கிஷோர் போன்ற வீரர்கள் யாருக்கும் தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை. சிஎஸ்கேவிற்கு வந்த இளம் வீரர்கள் பலர் தங்கள் பார்மை இழந்த கதையும் உண்டு. தோனி எப்போதும் மூத்த வீரர்களை வைத்து மட்டுமே ஆடுவதை விரும்புவார்.

வேண்டாம்

வேண்டாம்

இதனால் சிஎஸ்கே அணிக்குள் வர கூடாது என்று இளம் வீரர்கள் பலர் கருதுகிறார்கள். அங்கு சென்றால் வாய்ப்பு கிடைக்காது. வேறு அணிக்கு செல்லலாம், ஏலத்தில் சிஎஸ்கே நம்மை எடுக்காமல் இருப்பதே சிறப்பு என்று சில இளம் வீரர்கள் கருதுகிறார்கள்.

விருப்பம்

விருப்பம்

ஹைதராபாத், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா அணிக்கு சென்றால் நிறைய வாய்ப்பு கிடைக்கும். ராஜஸ்தான் அணியிலும் கூட ஆடுவதற்கு நன்றாக வாய்ப்பு கிடைக்கும். இதனால் அந்த அணிகளில் ஏலம் எடுக்கப்பட வேண்டும் என்று இளம் வீரர்கள் விரும்புகிறார்கள் .

Story first published: Thursday, January 28, 2021, 12:13 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
Youngsters are not so keen to join in CSK team ahead of IPL 2021 Mini Auction.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+