Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அருமையான பிளேயர்.. இவர பத்திரமா பாத்துக்குங்க... இளம் வீரரை பாராட்டிய அந்த மூத்த வீரர்

மும்பை:எதிர்காலத்தில் சிறப்பான வீரராக மாறும் வாய்ப்பு இளம் வீரர் ரிஷப் பண்டுக்கு உள்ளது. எனவே அவரை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று யுவராஜ் சிங் கூறி உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி.

ஆட்டத்தில் டெல்லி வீரர் ரிஷப் பண்ட் அடித்த காட்டடியை யாரும் மறக்க முடியாது. 27 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ரன்கள் தான் 200 ரன்களுக்கு மேல் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

வெற்றிக்கு உதவவில்லை

வெற்றிக்கு உதவவில்லை

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள யுவராஜ் சிங் அரைசதம் அடித்தாலும் அணியின் வெற்றிக்கு அது உதவவில்லை. போட்டி முடிந்தபின் யுவராஜ் சிங் கூறியதாவது:

சிறந்த வீரராக வருவார்

சிறந்த வீரராக வருவார்

ரிஷப் பண்ட் ஏராளமான திறமைகளை கொண்டவர். எதிர்காலத்தில் மிகச்சிறந்த வீரராக வருவார். அதனால் அவரை பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும். உலக கோப்பை போட்டியில் ரிஷப் பந்த் இடம் பெறுவாரா என என்று தெரியாது.

 சாதாரண விஷயமல்ல

சாதாரண விஷயமல்ல

இந்திய அணியில் இடம் பெற்று டெஸ்ட் போட்டிகளிலும் ரிஷப் நன்றாக விளையாடினார். 21 வயதில் வெளிநாடுகளில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. சிறப்பான எதிர்காலம் உள்ளது.

ஓய்வை அறிவிப்பேன்

ஓய்வை அறிவிப்பேன்

சரியான நேரம் வரும்போது, ஓய்வு அறிவிப்பை நான் வெளியிடுவேன். யாரும் எனது ஓய்வு குறித்து கவலைப்படவில்லை. யாரும் நெருக்கடி இல்லாத வகையில் ஓய்வை அறிவிப்பேன்.

இன்னும் விளையாடுவேன்

இன்னும் விளையாடுவேன்

2 ஆண்டுகளாக கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. ஆனாலும், இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம் என்று தோன்றுகிறது.

குழப்பம் தீர்ந்தது

குழப்பம் தீர்ந்தது

14 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட்டை அனுபவித்து, நேசித்து வருகிறேன். ஓய்வு குறித்து குழப்பமான சூழல் இருந்தபோது சச்சினுடன் கலந்து பேசினேன். அப்போது எனக்கு தெளிவு கிடைத்தது என்றார்.

Story first published: Monday, March 25, 2019, 14:09 [IST]
Other articles published on Mar 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+