
எந்த ஏமாற்றமும் இல்லை
"முதல் சுற்றில் யாரும் வாங்காதது பற்றி எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. அப்படி தான் நடக்கும் என நான் முன்பே நினைத்து இருந்தேன். இதற்கு காரணம் மிகவும் எளிது. ஐபிஎல் அணிகள் இளம் வீரர்களை வாங்கவே ஆர்வமாக இருப்பார்கள். நான் எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி காலத்தில் இருப்பதை போல தோன்றுவது தான் காரணம். கடைசி சுற்றில் வாங்குவார்கள் என நான் எண்ணினேன்" என்றார் யுவராஜ் சிங்.

ஆகாஷ் கொடுத்த ஊக்கம்
"நான் மும்பை அணிக்கு தான் செல்வேன் என உள்ளுக்குள் தோன்றியது. ஆகாஷ் அம்பானி என்னை பற்றி நல்ல விஷயங்களை கூறினார். அது எனக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது" என மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் யுவராஜ் குறித்து பேசியவற்றை நினைவூட்டினார் யுவராஜ்.

கடந்த சீசன் சொதப்பல்
கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு ஆடிய யுவராஜ் 8 போட்டிகளில் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதற்கு தன் பேட்டிங் இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தது தான் காரணம் என தெரிவித்தார். இந்த முறை எனக்கு கிடைக்கும் வாய்ப்பில் நன்றாக ஆட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

நண்பர்களுடன் இணைந்த யுவராஜ்
மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த முறை 2011 உலகக்கோப்பையில் ஆடிய சச்சின், சாகிர் கான், ரோஹித் சர்மா மற்றும் யுவராஜ் சிங் ஆகிய நான்கு வீரர்கள் இணைந்துள்ளனர். இவர்களில் சச்சின் ஆலோசகராகவும், ஜாகிர் கான் பயிற்சியாளராகவும் இருக்கிறார்கள். இவர்களுடன் அணியில் இருப்பது தனது திறமையை மீட்க உதவும் என கூறினார் யுவராஜ்.

யுவராஜ் சிங்கின் ஆசை
யுவராஜ் சிங் 2019 உலகக்கோப்பையில் ஆடுவதில் முனைப்பாக உள்ளார். அதற்கான கடைசி வாய்ப்பு ஐபிஎல் 2019 மட்டுமே. யுவராஜ் சிங்கை இந்திய அணியில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், அவர் தன் இழந்த பார்மை மீட்க வேண்டும். பழைய யுவராஜ் போல துடிப்பாக ஆட முடியாவிட்டாலும் அனுபவத்தை வைத்து ரன் குவித்து அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications