அய்யோ.. செல்லம்.. செம்ம க்யூட் அழகி.. அழகா இருக்கம்மா.. ரோஹித்தை கலாய்த்த சஹல்!
மும்பை: பேஸ்ஆப் பரிதாபங்களில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சேர்ந்து விட்டனர். மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மாவை பெண்ணாக சித்தரிக்கும் பேஸ்ஆப் படத்தைப் போட்டு அவரை கிண்டலடித்துள்ளார் யுஸ்வேந்திர சஹல்.
Recommended Video
எல்லாப் பக்கமும் இப்போது இந்த பேஸ்ஆப் அட்டகாசம்தான. ஆணை அழகிய பெண்ணாகவும், பெண்ணை கம்பீரமான ஆணாகவும் மாற்றிக் காட்டும் ஆப்தான் இந்த பேஸ்ஆப். இதை வைத்துத்தான் சமூக வலைதளங்களில் தற்போது பலரும் பொழுது போக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவை அழகான பெண்ணாக மாற்றி அந்தப் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் போட்டு கலாய்த்துள்ளார் யுஸ்வேந்திர சஹல்.

டிக்டாக் பிரியர்
சஹல் ஒரு தீவிர டிக்டாக் பிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆடுவது, பாடுவது என எக்ஸ்ட்ரா கரிக்குலர் வேலைகளில் அவர் பிசியாகவே இருக்கிறார். அதுவும் இப்போது லாக்டவுன் என்பதால் அவரது அலும்புகள் தாங்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது ரோஹித்தை வைத்து ஒரு கலாய் கலாய்த்துள்ளார். அது வைரலாகியுள்ளது.

மாறி மாறி கிண்டல்
ரோஹித்தும் சரி, சஹலும் சரி மாறி மாறி கலாய்த்துக் கொள்வது காலம் காலமாக நடப்பதுதான். நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று போகும் இந்த கலாய் சண்டைகள். அந்த வரிசையில் தற்போது சஹல் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். பேஸ்ஆப் மூலம் ரோஹித்தை பெண்ணாக மாற்றிய அவர் அந்தப் போட்டோவைப் போட்டு, 'சோ க்யூட் லுக்கிங் ரோஹிதா சர்மா பய்யா' என்று போட்டு கலகலப்பாக்கியுள்ளார்.

சூப்பர் அழகி
இந்த போட்டோவும், போஸ்ட்டும் இப்போது வைரலாகி வருகிறது. பலரும் ரோஹித் இவ்வளவு அழகா இருக்காரே , பெண்ணாகப் பிறந்திருந்தால் ரோஹித்தான் சூப்பர் அழகி என்று ஜொள்ளு விட்டு கலாய்த்துக் கொண்டுள்ளனர். ரோஹித்தே கூட இந்த போட்டோவை ரசித்துப் பார்த்திருப்பார். காரணம், உண்மையிலேயே அச்சு அசல் பெண்ணாக அவ்வளவு அழகாக வந்திருக்கிறது அவரது முகம்.

பதிலடி என்னவோ
சமீபத்தில்தான் சஹல் உடற்பயிற்சி செய்வதை போட்டு கிண்டலடித்திருந்தார் ரோஹித் சர்மா. சஹல் பீல்டிங் செய்தால் இப்படித்தான் இருக்கும் என்று அவரை ஓட்டியிருந்தார். இந்த வீடியோவுக்கு செம வரவேற்பு கிடைத்தது. ஹர்பஜன் சிங், ஹெர்ஷல் ஜிப்ஸ் உள்பட பலரும் வந்து கமெண்ட் போட்டு காமெடி செய்திருந்தனர். இப்போது சஹல் ரவுண்டு.. ரோஹித்தின் பதிலடிக்காக காத்திருப்போம்... வெட்டியாதானே இருக்கோம்.. வேற என்ன வேலை நமக்கு.. காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications