Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் ஒரு ஸ்கோரா? பந்தாடிய ஜிம்பாப்வே.. 13.3 ஓவரிலேயே முடிந்த மேட்ச். ஓமன் படுதோல்வி

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஓமன் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓமன் அணியை நிலைகுலையச் செய்தனர்.

கடந்த 2024 உலகக்கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறத் தவறிய ஜிம்பாப்வே அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலகக்கோப்பை அரங்கிற்குத் திரும்பியுள்ளது. தனது மறுவருகையை ஒரு அபார வெற்றியின் மூலம் அந்த அணி பதிவு செய்துள்ளது.

ZIM vs OMAN Zimbabwe Crushes Oman by 8 Wickets in T20 World Cup 2026 Bowlers Shine as Oman Collapses for 103

குரூப் பி பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா, முதலில் பந்துவீச முடிவு செய்தார். அவரது முடிவைச் சரியாக நிரூபிக்கும் வகையில் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர்.

சீட்டுக்கட்டு போலச் சரிந்த ஓமன்

தொடக்கத்திலேயே முசரபானி மற்றும் ரிச்சர்ட் ங்காரவா ஆகியோர் ஓமன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். ஓமன் அணி 4 ஓவர்களுக்குள் 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறியது. ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எனப் படுமோசமான நிலையில் அந்த அணி இருந்தது.

ஓமன் அணியின் விநாயக் சுக்லா (28 ரன்கள்) மற்றும் சுபியான் மெஹ்மூத் (25 ரன்கள்) ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்குக் கொண்டு வந்தனர். நதீம் கான் 20 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, ஓமன் அணி 19.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, ரிச்சர்ட் ங்காரவா மற்றும் பிராட் எவன்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

எளிதான வெற்றி

104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்குத் தொடக்கத்தில் லேசான சறுக்கல் ஏற்பட்டது. 30 ரன்களுக்குள் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. சுபியான் மெஹ்மூத் ஒரே ஓவரில் இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

எனினும், அதன் பிறகு ஜோடி சேர்ந்த பிரையன் பென்னட் மற்றும் மூத்த வீரர் பிரெண்டன் டெய்லர் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். பென்னட் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

டெய்லர் காயம்

வெற்றிக்கு அருகில் இருந்தபோது, நன்கு விளையாடிக் கொண்டிருந்த பிரெண்டன் டெய்லர் 31 ரன்கள் எடுத்த நிலையில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாகப் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா வெற்றி ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ஜிம்பாப்வே அணி 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் கலக்கிய முசரபானி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Monday, February 9, 2026, 18:52 [IST]
Other articles published on Feb 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+