Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே உதை.. 171வது இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்திய கால்பந்து அணி!

ஜூரிச், சுவிட்சர்லாந்து: சர்வதேச கால்பந்து தரிவரிசையில் இந்தியாவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 170வது இடத்தில் இருந்த அது 171வது இடத்திற்கு இறங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில் உலகக் கோப்பை சாம்பியன் ஜெர்மனி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த வருடத்தையும் அது சந்தோஷமாக நம்பர் ஒன் அணியாக முடிக்கிறது.

சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா தனது தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1725 புள்ளிகளுடன்

1725 புள்ளிகளுடன்

ஜெர்மனி அணி 1725 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

4 முறை சாம்பியன்

4 முறை சாம்பியன்

ஜோக்கிம் லோவை பயிற்சியாளராகக் கொண்ட ஜெர்மனி அணி, பிரேசிலில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

2வது இடத்தில் அர்ஜென்டினா

2வது இடத்தில் அர்ஜென்டினா

2வது இடத்தில் அர்ஜென்டினா நீடிக்கிறது. 3வது இடத்தில் கொலம்பியாவும், 4வது இடத்தில் பெல்ஜியமும் உள்ளன. 5வது இடம் நெதர்லாந்துக்குக் கிடைத்துள்ளது.

6வது இடத்தில் பிரேசில்

6வது இடத்தில் பிரேசில்

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு 6வது இடமே கிடைத்துள்ளது. 9வது இடத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும், 10வது இடத்தில் உருகுவேயும் உள்ளன.

டாப் 50ல் ஒரு ஆசிய அணியும் இல்லை

டாப் 50ல் ஒரு ஆசிய அணியும் இல்லை

முதல் 50 இடங்களில் ஒரு ஆசிய அணி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

51வது இடத்தில் ஈரான்

51வது இடத்தில் ஈரான்

ஆசிய அணிகளில் முதலிடத்தில் இருக்கிறது ஈரான். அந்த அணி தரவரிசையில் 51வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜப்பானுக்கு 54

ஜப்பானுக்கு 54

ஜப்பான் அணி 54வது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவுக்கு 171

இந்தியாவுக்கு 171

இந்திய கால்பந்து அணிக்கு 171வது இடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அது 170வது தரவரிசையில் இருந்தது.

Story first published: Friday, December 19, 2014, 11:25 [IST]
Other articles published on Dec 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+