Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க சொல்றீங்க.. பெலானிக்கும் வந்துருச்சா கொரோனா.. அதிர்ந்து போன கால்பந்து உலகம்!

ஜிஹான் : முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியின் நடுத்தர பீல்டர் மரோவென் பெலானிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சைனீஸ் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்காக ஷான்டாங்கிலிருந்து ஜிஹானுக்கு ரயில்மூலம் கடந்த 20ம் தேதி வந்த அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சைனீஸ் சூப்பர் லீக்கில் விளையாடிவரும் வீரர்களில் கொரோனா பாதித்துள்ள முதல் வீரர் இவர். இதையடுத்து மற்ற வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Former Manchester Utd player Fellaini tests positive for coronavirus in China

கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளும் விளையாட்டு வீரர்களும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பரபரப்பான தங்களது ஆட்டங்களில் இருந்து விலகி அவர்கள் வீட்டில் தனிமையை அனுபவித்து வருகின்றனர். பலர் இதை தங்களது ஓய்வாக கருதி அதை எதிர்கொண்டாலும், பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆடிய கால்களை கட்டி வைக்க வழி தெரியாமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர். பலர் இந்த நேரத்தில் தங்களது பிட்னசில் கவனம் செலுத்தி பல்வேறு உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்து வருகின்றனர். மேலும் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சமூக தனிமைப்படுத்துதலையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா சில வாரங்களாகத்தான் தன்னுடைய கோர முகத்தை அதிகமாக காட்டி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000த்தை தாண்டியுள்ளது. சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியின் நடுத்தர பீல்டர் மரோவென் பெலானிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சைனீஸ் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடிவரும் அவர், ஷான்டாங்கிலிருந்து ஜிஹானுக்கு ரயில்மூலம் கடந்த 20ம் தேதி சென்ற நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

32 வயதான பெலானி, சைனீஸ் சூப்பர் லீக்கின் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள முதல் வீரர் என்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019ல் ஷான்டாங்கில் இருந்துக் கொண்டு, முதல் சீசனில் ஷான்டாங் லுனெங் கிளப்பிற்காக விளையாடி 13 கோல்களை போட்டார் பெலானி. இதன்மூலம் இவரது அணி கடந்த சீசனில் 5வது இடத்தை பிடித்தது.

கொரோனா பாதிப்பு உலக அளவில் அச்சுறுத்திவரும் நிலையில் இதன் பாதிப்பிற்கு வீரர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள், உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Story first published: Sunday, March 22, 2020, 18:25 [IST]
Other articles published on Mar 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+