Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன் டீம்னா பயந்துருவோமா.. முதல் சம்பவமே தரமான சம்பவம்.. ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் சாதனை!

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் குரூப் ஈ பிரிவில் உள்ள ஜெர்மனி - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. ஏற்கனவே வலிமை வாய்ந்த அர்ஜென்டினா அணி தோல்வியை சந்திததால், முன்னாள் சாம்பியன் அணியில் ஒன்றான ஜெர்மனி அணியுடனான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ஜெர்மனி அணி தாக்குதல் பாணியை ஆட்டத்திற்காக 4-2-3-1 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியது. மறுமுனையில் ஜப்பான் அணியும் 4-2-3-1 என்ற ஃபார்மேஷனிலேயே களமிறங்கியது. இதனால் ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஜெர்மனி அட்டாக்

ஜெர்மனி அட்டாக்

தொடர்ந்து ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜெர்மனி அணி அட்டாக்கை தொடங்கியது. ஜெர்மனியின் அணியின் ஃபார்வேர்ட் வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை, ஜப்பான் அணியின் டிஃபெண்டர்கள் தடுத்து நிறுத்தினர். இருந்தும் 33வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

ஜெர்மனி முன்னிலை

ஜெர்மனி முன்னிலை

அந்த பெனால்டி வாய்ப்பில் ஜெர்மனி அணியின் கன்டோகன் ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் முன்னிலையுடன் ஜெர்மனி முதல் பாதியை முடித்தது.

ஜப்பான் பதிலடி

ஜப்பான் பதிலடி

தொடர்ந்து இரண்டாம் பாதியையும் ஜெர்மனி அணி அட்டாகோடு தொடங்க, ஜப்பான் அணியும் எளிதாக விடுவதாக இல்லை. தொடர்ந்து ஜப்பான் வீரர்கள் தாக்குதல் பாணி ஆட்டத்தை தொடர, ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய ரிட்ஸு முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

ஜப்பான் வெற்றி

ஜப்பான் வெற்றி

இதன்பின்னர் அடுத்த சில நிமிடங்களில் ஜப்பான் அணியின் டகுமா அசானோ ஜப்பான் அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் ஜெர்மனி அணி எவ்வளவு முயற்சித்தும், கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.

தொடரும் அப்செட்

தொடரும் அப்செட்

2014ம் ஆண்டு சாம்பியன் அணியான ஜெர்மனியை ஆசிய அணிகளில் ஒன்றான ஜப்பான் அணி வீழ்த்தியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா வீழ்த்திய நிலையில், இரண்டு நாட்களில் இரண்டு அப்செட்கள் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 23, 2022, 20:51 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+