Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்பிய பக்கமெல்லாம் ட்விஸ்ட்.. "பாஸ் மட்டுமே போதாது" ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜப்பான்!

தோஹா: வலிமை வாய்ந்த ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால் ஜெர்மனி அணி குரூப் சுற்றோடு வெளியேறியது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே குரூப்பில் உள்ள அணிகளில் யாருக்கும் சாதகம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் 4 அணிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த ஒரு பகுதியாக குரூப் ஈ பிரிவில் உள்ள ஜப்பான் - ஸ்பெயின் அணிகள் விளையாடியது. இதில் ஜப்பான் அணி வெற்றிபெற்றால் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், ஆட்டம் பரபரப்பாக இருந்தது.

ஸ்பெயின் கோல்

ஸ்பெயின் கோல்

ஆனால் ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணியின் மொராட்டா முதல் கோலை அடித்து அசத்த, ரசிகர்கள் அனைவரும் இது ஒன் சைடட் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். அதற்கேற்ப ஸ்பெயின் அணி வீரர்கள் முதல் பாதி அதிக நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதி

ஸ்பெயின் அணிக்கு எதிராக ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட வேண்டிய நிலை உருவாகியது. இருப்பினும் முதல் பாதி ஆட்ட நேரம் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் ஜப்பான் அணி, 48வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து அசத்தியது.

ஜப்பானின் அடுத்தடுத்த சாகசம்

ஜப்பானின் அடுத்தடுத்த சாகசம்

இதனால் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட, மீண்டும் 51வது நிமிடத்தில் ஜப்பான் அணி இரண்டாவது கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதன் பின்னர் ஸ்பெயின் அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினர். அனால் ஸ்பெயின் அணியின் அனைத்து முயற்சிகளையும் ஜப்பான் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

ஜப்பான் வெற்றி

ஜப்பான் வெற்றி

இரண்டாம் பாதி ஆட்ட நேர இறுதியில் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதன் மூலம் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் சாம்பியன் அணிகளான ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணியை வீழ்த்தியதன் மூலம் ஜப்பான் அணி முதல் அணியாக குரூப் ஈ பிரிவில் இருந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தப்பித்த ஸ்பெயின்

தப்பித்த ஸ்பெயின்

அதேபோல் ஜெர்மனி அணியை காட்டிலும் கூடுதல் அடித்திருந்ததால், ஸ்பெயின் அணியும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆட்டம் தொடங்கிய போது ஸ்பெயின் அணியே வெற்றிபெறும் என்றும், ஜெர்மனி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக ஜெர்மனியை முதல் போட்டியில் வீழ்த்தியதோடு, மூன்றாவது போட்டியில் ஸ்பெயினையும் வீழ்த்தி ஜப்பான் அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளது.

Story first published: Friday, December 2, 2022, 3:18 [IST]
Other articles published on Dec 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+