போலந்து 1-0 என வென்றது... மஞ்சள் அட்டை கைகொடுத்தது... நாக் அவுட் முன்னேறியது ஜப்பான்!
வோல்கோகிராட்: ஃபிபா உலகக் கோப்பையில் நடந்த எச் பிரிவு 1-0 என ஜப்பானை போலந்து வென்றது. மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா செனகலை வென்றது. ஜப்பான் மற்றும் செனகல் தலா 4 புள்ளிகளுடன் இருந்தன. ஆனால் குறைந்த மஞ்சள் அட்டை பெற்றதால் ஜப்பான் நாக் அவுட் சுற்று முன்னேறியது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. எச் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான், போலந்தை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் செனகல், கொலம்பியா மோதின.
ஜப்பானுக்கு வெற்றி
எச் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்றது. செனகல் 2-1 என போலந்தை வென்றது. அதற்கடுத்து நடந்த ஜப்பான், செனகல் ஆட்டம் 2-2 என டிராவானது. கொலம்பியா 3-0 என போலந்தை வென்றது.

ஜப்பானுக்கு வாய்ப்பு
தற்போதைய நிலவரப்படி ஜப்பான் மற்றும் செனகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. கொலம்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு தோல்விகளை சந்தித்த போலந்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகிறது.

முன்னேறுமா ஜப்பான்
ஃபிபாவின் ஆசியா கூட்டமைப்பு சார்பில் நடந்த தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற ஆஸ்திரேலியா, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா ஆகியவை முதல் சுற்றுடன் வெளியேறின. ஆசியாவில் இருந்து நாக் அவுட் நுழைவதற்கு ஜப்பானுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தது.

வென்றாக வேண்டும்
இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வென்றாக வேண்டிய நிலையில் போலந்தை ஜப்பான் சந்தித்தது. குறைந்தபட்சம் டிரா செய்தால் நாக் அவுட் வாய்ப்பு கிடைக்கும் நிலையில் இருந்தது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. கோலடிப்பதைவிட கோலடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. 59வது நிமிடத்தில் பெட்னாரெக் கோலடிக்க 1-0 என போலந்து வென்றது. மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா செனகலை வென்றது. ஜப்பான் மற்றும் செனகல் தலா 4 புள்ளிகளுடன் இருந்தன. ஆனால் குறைந்த மஞ்சள் அட்டை பெற்றதால் ஜப்பான் நாக் அவுட் சுற்று முன்னேறியது.


Click it and Unblock the Notifications