Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீளமான கேப்... 3 நாள்ல ரெண்டு போட்டி... ஆனாலும் வெற்றி பெற சிறப்பான வீரர்கள் இருக்காங்க -லோபெரா

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் அடுத்த போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

புத்தாண்டின் முதல் போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டியில் மும்பை சிட்டி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

கடந்த 12 நாட்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காத மும்பை சிட்டி அணி, தற்போது இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து அந்த அணியின் கோச் செர்ஜியோ லோபெரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மும்பை -கேரளா அணிகள் மோதல்

மும்பை -கேரளா அணிகள் மோதல்

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் அடுத்த போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களாக போட்டிகள் நடத்தப்படாத நிலையில் புத்தாண்டின் முதல் போட்டியான இதில் மும்பை சிட்டி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

குலையும் தீவிரம்

குலையும் தீவிரம்

கடந்த 12 நாட்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காத மும்பை சிட்டி அணி கேரளா அணியுடன் இந்த போட்டியில் மோதவுள்ள நிலையில், இந்த நீண்ட இடைவெளி அணியின் வெற்றிக்கான தீவிரத்தை குலைக்கும் என்று அந்த அணியின் கோச் செர்ஜியோ லோபெரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

2வது இடத்தில் மும்பை சிட்டி

2வது இடத்தில் மும்பை சிட்டி

மேலும் கடந்த 12 நாட்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காத நிலையில் 3 நாட்களில் இரண்டு போட்டிகளில் தங்களது அணி வீரர்கள் விளையாட உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார் லோபெரா. கடந்த 12 நாட்களாக எந்த போட்டிகளிலும் விளையாடாத நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை சிட்டி தன்னுடைய இடத்தை மோஹுன் பகன் அணிக்கு விட்டுத் தந்துள்ளது.

திறமையான வீரர்கள்

திறமையான வீரர்கள்

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை மீண்டும் பெற வேண்டிய அவசியத்தையும் லோபெரா வலியுறுத்தியுள்ளார். ஆனால் தங்களது அணி வீரர்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும் இந்த இடைவெளியில் தாங்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைத்து மதிப்பிடவில்லை

குறைத்து மதிப்பிடவில்லை

கேரளா அணியுடனான கடந்த 6 போட்டிகளில் மும்பை சிட்டி அணி 5 போட்டிகளில் வெற்றியு ஒன்றில் டிராவும் பெற்றுள்ளது. ஆயினும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை குறைத்து மதிப்பிடவில்லை என்றும், சிறப்பான வீரர்கள் மற்றும் கோச்சுடன் அந்த அணி வலிமையாக உள்ளதாகவும் லோபெரா குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, January 1, 2021, 22:07 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+