Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜப்பானில் பெண் ஊழியரிடம் அத்துமீறிய பீகார் பாரா நீச்சல் வீரர் அதிரடி நாடு கடத்தல்.. என்ன நடந்தது?

நகோயா: 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. அங்கு இந்திய பாரா நீச்சல் அணியின் மூத்த வீரரான முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக், தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜப்பான் போலீசாரால் பிடிபட்டு, அதிரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான ஷம்ஸ் ஆலம் ஷேக், இந்தத் தொடரில் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் ஜப்பான் சென்றிருந்தார். திங்களன்று இந்திய வீரர்கள் தங்கியிருந்த விடுதி அறைக்கு பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் வழக்கம் போல் தூய்மைப் பணிக்காகச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஷம்ஸ் ஆலம் ஷேக் பாலியல் ரீதியாக அத்துமீறி வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, விடுதிக்கு விரைந்த ஜப்பான் போலீசார் அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்க அனுமதிக்காமல், செவ்வாய்க்கிழமையே அவர் இந்தியாவுக்கு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டார்.

IND vs NZ முதல் போட்டி பிளேயிங் 11.. வருண் வந்ததால் சீனியர் பவுலர் நீக்கம்.. வைபவ் சூர்யவன்ஷி நிலை?

IND vs NZ முதல் போட்டி பிளேயிங் 11.. வருண் வந்ததால் சீனியர் பவுலர் நீக்கம்.. வைபவ் சூர்யவன்ஷி நிலை?

சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை இந்திய பாராலிம்பிக் குழு மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. விளையாட்டு விதிகளையும் நாட்டின் கவுரவத்தையும் மதிக்காமல், அவமானத்தை ஏற்படுத்திய இந்த நீச்சல் வீரருக்கு எதிராக மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க இந்திய பாராலிம்பிக் குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆசிய பாரா போட்டிகள் நிறைவடைந்ததும் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Asian Para Games Indian Para-Swimmer Shams Alam Shaik Deported from Japan for Misconducts

சர்வதேச பாரா நீச்சல் பிரிவில் உலக அளவில் நம்பர் 1 இடத்தை அலங்கரித்த ஷம்ஸ் ஆலம், கடந்த 2018 ஜகார்த்தா ஆசிய பாரா போட்டியில் 2 தங்கம் வென்றவர். 2025 சர்வதேச போட்டிகளிலும் ஆசிய சாதனை படைத்தவர். தனது 3-வது ஆசிய பாரா போட்டியில் களம் காணச் சென்ற இடத்தில் இத்தகைய கீழ்த்தரமான புகாரில் சிக்கி நாடு கடத்தப்பட்டுள்ளது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 முறை ஐபிஎல் ஹாட்ரிக் எடுத்த வீரரை தூக்கிய கங்குலி.. DC அணியின் புதிய ஸ்பின் கோச் ஆன அமித் மிஸ்ரா

Also Read

3 முறை ஐபிஎல் ஹாட்ரிக் எடுத்த வீரரை தூக்கிய கங்குலி.. DC அணியின் புதிய ஸ்பின் கோச் ஆன அமித் மிஸ்ரா
Story first published: Thursday, October 22, 2026, 9:56 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+