Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரா ஒலிம்பிக்: 11 ஆக உயர்ந்த பதக்க எண்ணிக்கை.. புதிய சாதனையுடன் பதக்கம் வென்ற பிரவீன் குமார்!

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் பிரவீன் குமார் தனது அறிமுகப் போட்டியிலேயே புதிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

 இந்தியாவின் பதக்க வேட்டை

இந்தியாவின் பதக்க வேட்டை

இந்த தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை இந்திய அணி 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் இருந்து வந்தது. சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

புதிய பதக்கம்

புதிய பதக்கம்

இந்நிலையில் உயரம் தாண்டுதல் பிரிவில் இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. இன்று ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்ரது. இதில் இந்திய வீரர் பிரவீன் குமாருக்கும் பிரிட்டன் வீரர் ஜானதனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பிரவீன் குமார் வென்றார்.

ஆசிய சாதனை

ஆசிய சாதனை

இந்திய வீரர் பிரவீன் குமார் பங்கேற்கும் முதல் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி இதுவாகும். 2.7மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதில் சுவாரஸ்ய விஷயம் என்வென்றால் புதிய சாதனையுடன் பதக்கம் வென்றது தான். அதாவது 2.07 என்ற உயரத்தை தாண்டி புதிய ஆசிய சாதனையை படைத்துள்ளார். பிரி்ட்டனைச் சேர்ந்த ஜோனத்தன் ப்ரூம் எட்வர்ட்ஸ் 2.10 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், போலந்து வீரர் மேக்ஜே லெபியாட்டோ 2.04 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இதன் மூலம் இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி பெரும அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுதான். இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Story first published: Friday, September 3, 2021, 13:57 [IST]
Other articles published on Sep 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+