Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100 மீ., ஓட்டம்-9.58 வினாடிகளில் வந்து உசைன் போல்ட் சாதனை

Usain Bolt
பெர்லின்: 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் மின்னல் வீரர் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் 9.58 வினாடிகளில் வந்து தனது பழைய சாதனை முறியடித்துள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் நடந்த ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் மின்னல் வீரர் என்று தடகள ரசிகர்களால் அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், அவரது போட்டியாளர்களாக கருதப்படும் ஜைமைக்காவின் அசெபா பாவெல், அமெரிக்காவின் டைசன் கே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் 9.69 வினாடிகளில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்ற போல்ட் நேற்றும் அசத்தினார். அவர் 9.58 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து தனது உலக சாதனையை தானே முறியடித்தார்.

டைசன் கே (9.71 வினாடி) வெள்ளியும், அசெபா பாவெல் (9.84 வினாடி) வெண்கலமும் கைப்பற்றினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+