Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிகப் பெரிய வெற்றி.. டாப் 20 வீரரை வீழ்த்திய பிரஜ்னேஷ்.. இந்தியன் வெல்ஸ் தொடரில் அசத்தல்!

டெல்லி : இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் தன் டென்னிஸ் வாழ்வின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.

ஏடிபி மாஸ்டர்ஸ் தொடரான இந்தியன் வெல்ஸ் தொடரின் முதல் சுற்றில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஃபிரான்ஸின் பென்வா பியர்ரே-வை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு நுழைந்தார்

முதல் செட்

இரண்டாம் சுற்றில் உலக ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் 18வது இடத்தில் இருக்கும் நிகொலோஸ் பசிலாஷ்விலி-ஐ சந்தித்தார். இந்த போட்டியின் முதல் செட்டை பிரஜ்னேஷ் 6-4 என கைப்பற்றினார்.

இரண்டு செட்கள்

இரண்டு செட்கள்

அடுத்த இரு சுற்றுகளும் டை-பிரேக்கர் வரை சென்றன. இரண்டாம் சுற்றை நிகொலோஸ் கைப்பற்றினார். அடுத்து போராடிய பிரஜ்னேஷ் மூன்றாம் சுற்றை கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார்.

பெரிய வெற்றி

பெரிய வெற்றி

போட்டி முடிவில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 6-4, 6-7(6), 7-6(4) என்ற செட் கணக்கில் நிகொலோஸ்-ஐ வென்றார். முதல் முறையாக உலகின் முதல் 20 இடங்களுக்குள் இருக்கும் வீரர் ஒருவரை பிரஜ்னேஷ் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை முன்னேற்றம்

தரவரிசை முன்னேற்றம்

இந்த பெரிய வெற்றி மூலம், தற்போது ஆடவர் தரவரிசையில் 97வது இடத்தில் இருக்கும் பிரஜ்னேஷ் 80வது இடத்துக்குள் வருவார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வெல்ஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள பிரஜ்னேஷ் இந்த சுற்றில், உலகின் 89வது இடத்தில் இருக்கும் குரோஷியாவின் இவோ கர்லோவிக்-ஐ சந்திக்கிறார்.

Story first published: Monday, March 11, 2019, 12:58 [IST]
Other articles published on Mar 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+