For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன்சியில் தோனி செய்த அந்த மாற்றங்கள்.. சிஎஸ்கேவின் கம்பேக்கிற்கு முக்கிய காரணம்.. முழு விவரம்!

சிஎஸ்கே அணியை மீட்டு கொண்டு வர கேப்டன் தோனி தனது கேப்டன்சியில் செய்த மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் கம்பேக் கொடுத்தது.

மொத்தம் 7 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

கேப்டன்சி

கேப்டன்சி

3 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக சொதப்பியது. இதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான தோனி இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே அணியின் பிரச்னைகளை நன்கு புரிந்துவைத்துக்கொண்டு செயல்பட்டார். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக மொயின் அலியை முதல் விக்கெட்டிற்கு களமிறக்கியது வெகுவாக பாராட்டப்பட்டது.

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கடந்தாண்டுக்கும் இந்தாண்டுக்கும் தோனியின் கேப்டன்சியில் நல்ல மாற்றம் தெரிந்தது. கடந்த வருடம் தோனி 5 பவுலர்களை மட்டுமே வைத்திருந்தார். அதிலும் அடிக்கடி மாற்றம் செய்தார். பேட்டிங்கில் ருத்ராஜ் கெயிக் வாட், நாராயண் ஜகதீசன் என அடிக்கடி உட்காரவைக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்தார்.

வீரர்கள் மீது நம்பிக்கை

வீரர்கள் மீது நம்பிக்கை

இந்த முறை சிஎஸ்கே அணியில் விளையாடிய 7 இந்திய வீரர்களில் ஒருவர் கூட உட்காரவைக்கப்படவில்லை. ருத்ராஜ் கெயிக்வாட், ஷர்துல் தாக்கூர் போன்றோர் தொடக்கத்தில் சொதப்பிய போதும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அயல்நாட்டு வீரர்களிலும் காயம் காரணமாக மட்டுமே மொயின் அலிக்கு பதிலாக டுவைன் பிராவோ கொண்டு வரப்பட்டார். மொத்தமாக 7 போட்டிகளையும் சேர்த்து 13 வீரர்களை மட்டுமே சிஎஸ்கே பயன்படுத்தியுள்ளது.

கோப்பைக்கு வாய்ப்பு

கோப்பைக்கு வாய்ப்பு

சிஎஸ்கே தற்போது ஃபுல் ஃபார்மில் தயாராக உள்ளது. மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டாலும் இதே அணி விளையாண்டால் நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் அயல்நாட்டு வீரர்கள் உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதால் தொடரில் மீண்டும் பங்கேற்பாரா என்பதில் குழப்பம் உள்ளது.

Story first published: Saturday, May 15, 2021, 21:10 [IST]
Other articles published on May 15, 2021
English summary
Aakash Chopra Reveals the Dhoni's Captaicy changes in IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+