Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேட்ச்சை விட்ட சிராஜ்; உசுப்பேற்றிய கோலி.. அடுத்த பந்திலேயே செம "ட்விஸ்ட்" - ஏமாந்த SRH இளம் வீரர்

அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ஹைதராபாத் நிலைமை 2வது ஓவரிலேயே சற்று மோசமாகி இருக்கிறது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.6) நடைபெற்று வரும் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற கேப்டன் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். அதிக ரன் ரேட்டுடன் வெற்றிப் பெற வேண்டும் என்பதால், கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

 ஹைதராபாத் லெவன்

ஹைதராபாத் லெவன்

அபுதாபியில் நடைபெற்று வரும் இப்போட்டியில், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், விராட் கோலி (c), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுவேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜேசன் ராய், ரிதிமான் சாஹா (wk), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 முக்கியமான விஷயம்

முக்கியமான விஷயம்

பெங்களூருவுக்கு இந்த போட்டியோடு சேர்த்து, 2 போட்டிகள் மீதமுள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று, கடைசியாக டெல்லியுடன் மோதும் போட்டியிலும் வென்றால், 20 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பஞ்சாப்புடன் சிஎஸ்கே தோற்றால், நிச்சயம் பெங்களூரு இரண்டாம் இடம் பிடித்துவிடும். ஐபிஎல்-லை பொறுத்தவரை பிளே ஆஃப் விதிமுறைகள் தெளிவாக அனைவருக்கும் தெரியும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் போட்டியில் தோற்கும் அணி, 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்த அணிகள் மோதிய போட்டியில் வெற்றிப் பெற்ற அணியுடன் மோதும். அதில் வெற்றிப் பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஸோ, முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பது என்பது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான விஷயமாகும்.

Recommended Video

IPL 2021: Ishan Kishan acknowledges support from Kohli, MI teammates after RR knock | Oneindia Tamil
 வழக்கத்துக்கு மாறாக

வழக்கத்துக்கு மாறாக

இதையெல்லாம் மனதில் வைத்து தான் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். காரணம், ஃபார்மிலேயே இல்லாத ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து, குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, அந்த இலக்கை குறைவான ஓவர்களில் சேஸ் செய்து மும்பையைப் போல ரன் ரேட்டை எகிற வைப்பதே கோலியின் வியூகமாகும். இந்நிலையில், ஹைதராபாத் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில், வழக்கமாக ரிதிமான் சாஹா, ஜேஸன் ராயுடன் களமிறங்குவார். ஆனால், இன்றைய போட்டியில் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா - ராய் கூட்டணி களமிறங்கியது.

 அதிருப்தி

அதிருப்தி

இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் ஜார்ஜ் கேர்டன் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து போட்டியின் சூழலை அப்படியே மாற்றினார். இந்த ஓவரில் நான்காவது பந்தில், deep backward square leg-ல் அபிஷேக் தூக்கி அடித்தார். பந்து சிக்ஸ் லைனுக்கு கொஞ்சம் முன்பாகவே லேண்ட் ஆக, சிராஜ் அதனை கேட்ச்சாக முயன்றார். அது ஈஸியான கேட்ச் என்று கூற முடியாது; ஆனால் தவறவிடக் கூடாத கேட்ச். நிச்சயம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், சிராஜ் பந்தை கையில் வாங்கி பிறகு டைவ் அடித்ததால், அதனை தவறவிட்டார். சிராஜ் நிச்சயம் கேட்சை பிடித்துவிடுவார் என்று கோலி எதிர்பார்த்த நிலையில், அவர் தவற விட்டவுடன், அங்கேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

 அடுத்த ட்விஸ்ட்

அடுத்த ட்விஸ்ட்

அப்போது ஆவேசத்துடன் சில வார்த்தைகளையும் கோலி வெளிப்படுத்தினார். அந்த வார்த்தைகள் சிராஜை உசுப்பேற்றியதோ இல்லையோ, பேட்டிங் செய்து கொண்டிருந்த அபிஷேக்கை உசுப்பேற்றிவிட்டது. ஓப்பனிங் இறங்கும் வாய்ப்பு.. ஒரு கேட்சில் இருந்து தப்பித்த தருணம் என்று பல கண்டங்களை கடந்து கிடைத்த அற்புதமான பேட்டிங் வாய்ப்பை கோலியின் அந்த வார்த்தைகளின் காரணமாக, சூடேறி மீண்டும் அடுத்த பந்த்தையே தூக்கி அடித்தார். ஆனால், இம்முறை பந்து உயரமாக சென்றதே தவிர, தூரம் செல்லவில்லை. சர்க்கிலின் உள்ளே உயர பறந்த பந்தை டென்ஷனே இன்றி கேட்ச்சாக்கினார் மேக்ஸ்வெல். அபிஷேக் ஏமாந்து வெளியேறியினார்.

கோலி அப்படி என்ன தான் சொல்லியிருப்பாரு!!?

Story first published: Wednesday, October 6, 2021, 20:33 [IST]
Other articles published on Oct 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+