
12 மைதானங்களில் போட்டி
நடப்பு சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன. 12 மைதானங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வலுவான அணியாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு அணி எதுவென்றால் அது மும்பை இந்தியன்ஸ்தான் என்று யோசிக்காமல் செல்லிவிடலாம். 15 சீசன்களில் இதுவரை 5 முறை கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

வலுவான கம் பேக் கொடுக்குமா?
எனவே, தோல்விகளில் இருந்து மீண்டும் நடப்பு ஐபிஎல் போட்டியில் வலுவான கம்பேக் கொடுக்க ரோகித் சர்மா தலைமையிலான படை தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாற்றிலேயே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. 14 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே மும்பைக்கு வெற்றி கிட்டியது. ஆனால், இந்த முறை அந்த சோகத்தை மாற்றி கோப்பையை வெல்லும் கனவுடன் தயராகி வருகிறது.

பும்ரா விளையாடவில்லை
ஆனால், இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவ்வளவு சாதாரணமாக அமைய போவது இல்லை. ஏனென்றால் இரண்டு நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பந்து வீச்சாளரும் டெத் ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கிலியை ஏற்படுத்தும் வீரருமான பும்ரா காயம் காரணமாக நடப்பு ஆண்டு விளையாடவில்லை.

பந்துவீச்சில் பலவீனம்
அதேபோல், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் முழு தொடரிலும் விளையாட போவது இல்லை. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ள நிலையில் இந்த இரு வீரர்களும் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் கிரிக்கெட்டை பொறுத்தவரை எளிதில் எதையும் கணித்து விட முடியாது. எனவே, இந்த பின்னடைவுகளை மும்பை இந்தியன்ஸ் கடந்துவரும் என்பதே அந்த அணியின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான பிளேயிங் லெவனை (உத்தேச) பார்க்கலாம்.

இஷான் கிஷான், ரோகித் சர்மா
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்): கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் இஷான் கிஷான் 15.25 கோடிக்கு மும்பை அணிக்கு எடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த இஷான் கிஷான் அதே பார்மில் நடப்பு ஆண்டு சீசனையும் தொடரும் எண்ணத்தில் உள்ளார்.
ரோகித் சர்மா (கேப்டன்) : மும்பை அணியின் மொத்த பலமே ரோகித் தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 5 டைட்டில்களை ரோகித் வென்றுள்ளார்.

டேவல்ட் பிரேவிஸ், திலக் வர்மா
டேவல்ட் பிரேவிஸ்: தென் ஆப்பிரிக்க வீரரான டேவெல்ட் பிரேவிஸ் கடந்த ஐபிஎல் தொடரில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசினார். நடப்பு ஆண்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையில் இருக்கும் பிரேவிஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் சொத்தாக பார்க்கப்படுகிறார்.
திலக் வர்மா: கடந்த சீசனில் தீலக் வெர்மாவின் பேட்டிங் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே நடப்பு சீசனிலும் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன்
சூர்யகுமார் யாதவ்: சூர்யகுமார் யாதவை பற்றி சொல்லவே தேவையில்லை. உலகின் நெ.1 டி20 பேட்ஸ்மேனான சூர்ய குமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்க விடக்கூடியவர்.
கேமரூன் க்ரீன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டரான கேம்ரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் 17.50 கோடிக்கு ஏலம் எடுத்து இருந்தது. 23-வயதான கீரின் ஐபிஎல் போட்டியில் நடப்பு ஆண்டில்தான் தனது இன்னிங்சை தொடங்க இருக்கிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர், ஜோப்ரா ஆர்ச்சர்
ஜோப்ரா ஆர்ச்சர்: ஜஸ்பிரித் பும்ரா விளையாடத காரணத்தால் ஆர்ச்சர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆர்சர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பந்து வீச்சாளராக இருக்கிறார். அவர் மீதான பொறுப்பும் அதிகரித்துள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கர்: சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் 2021 ஆம் ஆண்டில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்து வருகிறார். ஆனாலும் இதுவரை ஒரு போட்டியில் கூட களம் இறங்கவில்லை. ஆனால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமார் கார்த்திகேயா, ஷாம்ஸ் முலானி
ஷாம்ஸ் முலானி: ஷாம்ஸ் முலானி உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீதான எதிர்பாப்பும் அதிகரித்துள்ளது.
குமார் கார்த்திகேயா: மத்திய பிரதேசத்தை சேர்ந்த குமார் கார்த்திகேயா கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடினார். அவர் பந்து வீச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய சுழல்பந்து வீச்சாளராக இருப்பார்.
ஜேசன் பெஹ்ரண்டார்ப்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேசன் பெஹ்ரண்டார்ப் ஆர்.சி.பி அணியில் கடந்த ஆண்டு விளையாடினார். ஆர்ச்சருக்கு பக்க பலமாக இவர் பந்து வீச்சில் கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











