For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திரும்பவும் வந்துட்டாரு புது மாப்பிள்ளை... குவாரன்டைன்ல இருந்தாலும் பயிற்சி... அதுதான் பும்ரா!

மும்பை : ஐபிஎல் 2021 தொடருக்கு இன்னும் சில நாட்கள் உள்ளது. இதையொட்டி அனைத்து அணிகளிலும் ஏறக்குறைய அனைத்து வீரர்களும் இணைந்துள்ளனர்.

அனைத்து அணிகளிலும் வரும் 2ம் தேதிக்குள் இணையும் வீரர்கள் மட்டுமே முதல் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று விதிமுறை உள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்காக கடந்த இங்கிலாந்து தொடர்களில் பங்கேற்காமல் விலகியிருந்த ஜஸ்பிரீத் பும்ரா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் குவாரடைனில் பங்கேற்றுள்ளார்.

விடுப்பு எடுத்த பும்ரா

விடுப்பு எடுத்த பும்ரா

தனது திருமணத்தையொட்டி கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையில் விலகிய ஜஸ்பிரீத் பும்ரா, தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து இவரது திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், தற்போது ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் நேற்று முதல் இணைந்துள்ளார்.

பிட்னஸ் பயிற்சி

தொடர்ந்து 7 நாட்கள் குவாரன்டைனில் அவர் ஈடுபட உள்ளார். இதையொட்டி ஹோட்டல் ரூமில் உள்ள அவர், பிட்னஸ் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதன் வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் அணியில் பும்ரா

மீண்டும் அணியில் பும்ரா

கடந்த 15ம் தேதி பும்ராவிற்கு கோவாவில் திருமணம் நடைபெற்றது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை அவர் மணந்துள்ளார். இந்நிலையில் திருமணம் நடைபெற்று முடிந்து 15 நாட்களுக்குள்ளாகவே அவர் மீண்டும் ஐபிஎல் தொடருக்காக அணியில் இணைந்துள்ளார்.

பயிற்சிகளில் பும்ரா ஈடுபடுவார்

பயிற்சிகளில் பும்ரா ஈடுபடுவார்

ஐபிஎல் விதிமுறைகளின்படி ஒவ்வொரு வீரரும் 7 நாட்கள் குவான்டைனில் ஈடுபட வேண்டும். அதன்படி தற்போது தனது குவாரன்டைனை பும்ரா துவக்கியுள்ளார். இதையடுத்து சென்னையில் நடைபெறவுள்ள அணியின் பயிற்சிகளில் அவர் பங்கேற்பார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி இடையிலான முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 31, 2021, 13:47 [IST]
Other articles published on Mar 31, 2021
English summary
Bumrah tied the knot with sports presenter and anchor Sanjana Ganesan on March 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+