Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப் சிங்- காக மாறிய கிறிஸ் கெயில்... குழப்பத்தில் ஆடிப்போன ரசிகர்கள்.. காரணம் என்ன?

மாலத்தீவு: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் 'பஞ்சாப் சிங்'-ஐ போல் மாறியுள்ளது ரசிகர்களை வியக்கவைத்துள்ளது.

Recommended Video

Chris Gayleன் Punjabi Daddy அவதாரம் !ஆடிப்போன ரசிகர்கள் | Punjab Kings | OneIndia Tamil

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து தங்களது வீடுகளிலும், ஹோட்டல் குவாரண்டைனிலும் இருக்கும் வீரர்கள், சமூக வலைதளங்களில் ஆக்டீவாகியுள்ளனர்.

மாலத்தீவு

மாலத்தீவு

ஐபிஎல் தொடருக்கு பின்னர் அயல்நாட்டு வீரர்கள் முதலில் மாலத்தீவு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் மாலத்தீவிலேயே தங்கிவிட்டார். அங்கு அவர் தனது விடுமுறை நாட்களை உல்லாசமாக கழித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவ்வபோது புது புது புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

 பஞ்சாப் சிங்

பஞ்சாப் சிங்

இந்நிலையில் தற்போது 'பஞ்சாப் சிங்' போல் வேடமணிந்து வீடியோக்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ் கெயில் தற்போது 'பஞ்சாபி டாடி' என்ற ஆல்பம் பாடலில் நடித்து வருகிறார். அதற்காக டர்பன் அணிந்து முழுவதுமாக சிங்காக மாறியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் 'சூட்டிங்கிற்காக ஆவலுடன் காத்துள்ளேன், பஞ்சாபி டாடி தெறிக்கவிடப்போகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக அதிரடி காட்டி வந்த கெயிலை இந்தாண்டு 3வது வீரராக களமிறக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி அவர் 178 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் கடந்தாண்டு தொடக்க வீரராக ஆடிய போது 7 போட்டிகளில் 288 ரன்களை விளாசினார். அதே போல கடந்தாண்டு 23 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஆனால் இந்தாண்டோ 8 சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். எனவே அவர் மீண்டும் ஓப்பனிங் ஆட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கெயிலுக்கு வாய்ப்பு

கெயிலுக்கு வாய்ப்பு

தற்போது மாலத்தீவில் இருக்கும் கிறிஸ் கெயில் இந்த மாதம் முழுவதும் அங்கே தான் பொழிதை கழிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜூன் 10ம் தேதி முதல் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அடுத்தடுத்து தொடர்கள் உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் நோக்கி இந்த தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்த தொடர்களில் கிறிஸ் கெயில் நிச்சயம் இடம் பெறுவார் எனக்கூறப்படுகிறது.

Story first published: Tuesday, May 25, 2021, 18:47 [IST]
Other articles published on May 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+