Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சல்லுன்னு 9 சிக்ஸர்.. ஜில்லுன்னு ஜெயித்த ஜமைக்கா.. சுள்ளென்று சுட்டெரித்த கெய்ல்!

கிராஸ் தீவு, செயின்ட் லூசியா: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் தொடர்ந்து அதிரிபுதிரியாக ஆடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய அவர் இங்கிலாந்து டுவென்டி 20 தொடரிலும் பின்னி எடுத்தார். தற்போது மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து வரும் கரீபியின் பிரீமியர் லீக் போட்டிகளிலும் பிரமாதப்படுத்தி வருகிறார்.

ஜமைக்கா டல்லவாஸ் அணியின் கேப்டனாக செயல்படும் கிறிஸ் கெய்ல், செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது பின்னி விட்டார் பேட்டிங்கில்.

அதிரடியாக ஆடிய கெய்ல், 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் ரன் குவித்தார். அவரது அதிரடி ஆட்டம் காரணமாக ஜமைக்கா அணி வென்றது. பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்காவுக்கு வெற்றி கிடைத்தது.

கெவினா.. கெய்லா

கெவினா.. கெய்லா

செயின்ட் லூசியா அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கும், ஜமைக்காவின் கெய்லுக்கும்தான் நேரடிப் போட்டியே நடந்தது.

25 பந்துகளில் 26

25 பந்துகளில் 26

கெவின் பீட்டர்சன் 25 பந்துகளைச் சந்தித்து ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்களைக் குவித்தார். ஆனால் கெயில் பின்னி எடுத்து விட்டார்.

118 ரன்களில் சுருண்ட லூசியா

118 ரன்களில் சுருண்ட லூசியா

செயின்ட் லூசியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களில் சுருண்டது. இது ஜமைக்காவுக்கு மிகவும் எளிதாகப் போனது. அதன் சேஸிங் ரொம்ப ஜரூராக இருந்தது.

அடேங்கப்பா அடி

அடேங்கப்பா அடி

கிறிஸ் கெய்ல் தனது பேட்டிங்கில் அதிரடியைக் காட்டினார். 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன், 36 பந்துகளில் 90 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் வேறு இருந்தார் கெய்ல். அவரது ஸ்டிரைக் ரேட் 250 ஆக இருந்தது.

விக்கெட் இழப்பின்றி

விக்கெட் இழப்பின்றி

இறுதியில் விக்கெட் இழப்பின்றி ஜமைக்கா அணி வெற்றி பெற்று செயின்ட் லூசியாவை வீழ்த்தியது.

Story first published: Monday, June 29, 2015, 12:25 [IST]
Other articles published on Jun 29, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+