For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பைக்கு ஆப்பு வைத்த மாஜி CSK வீரர்.. இஷான் கிஷனை பேட்டிங் வராமல் செய்தார்.. பவுலிங்கில் தாராளம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மாஜி சிஎஸ்கே வீரர் கிறிஷ் ஜார்டன் மும்பை அணிக்கு பெரிய பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தி விட்டார். தோனி எப்போதுமே ஒரு வீரர் எவ்வளவு மோசமாக செயல்பட்டாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவார்.

ஆனால் தோனியே வேண்டாம் சாமி என்று அனுப்பி வைத்த வீரர் என்றால் அது கிறிஸ் ஜார்டன் தான். இந்த நிலையில் கிறிஸ் ஜார்டனை மாற்று வீரராக மும்பை அணி ஒப்பந்தம் செய்தது.

EX CSK Player chris Jordan became villian for Mumbai indians

இந்த நிலையில் குஜராத்துக்கு எதிரான குவாலிபையர் ஆட்டத்தில் மும்பை அணி ரன்களை வாரி வழங்கியது. இதில் அதிகபட்சமாக மாஜி சிஎஸ்கே வீரர் கிறிஸ் ஜார்டன் 4 ஓவர்கள் வீசி 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.இதேபோன்று கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் மத்வால் நான்கு ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.இந்த நிலையில் கிறிஸ் ஜார்டன் பில்டிங் செய்து கொண்டிருந்தபோது தேவையின்றி தன்னுடைய சொந்த வீரரான இஷான் கிஷனை தனது முழங்கையால் வேகமாக முட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த இஷான் கிஷன் வலியால் துடித்ததோடு மட்டுமல்லாமல், பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் இஷான் கிஷன் கண்கஷன் ரூல் விதிப்படி மாற்றப்பட்டு அவருக்கு பதில் விஷ்ணு வினோத் களமிறங்கினார். 234 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போது இஷான் கிஷன் தொடக்க விழா களமிறங்கிய விளையாடி இருந்தால் மட்டுமே வேறு மாதிரி சென்றிருக்கலாம்.

ஆனால் இந்த காயம் காரணமாக அவர் பிளேயிங் லெவனில் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கிறிஸ் ஜார்டனை கடுமையாக சாடி வருகிறார்கள். மேலும் கிறிஸ் ஜார்டனை சிஎஸ்கே வின் ஸ்லீப்பர் செல் என்றும் ரசிகர்கள் அழைத்து வருகின்றார்கள். தயவுசெய்து அடுத்த சீசனில் சேர்க்க வேண்டாம் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சொந்த அணிக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை உபத்திரம் செய்து விடக்கூடாது என்பதற்கு கிறிஸ் ஜார்டன் நல்ல சான்றாக இருக்கிறார் என்றும் சில ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

Story first published: Friday, May 26, 2023, 23:48 [IST]
Other articles published on May 26, 2023
English summary
EX CSK Player chris Jordan became villian for Mumbai indians மும்பைக்கு ஆப்பு வைத்த மாஜி CSK வீரர்.. இஷான் கிஷனை பேட்டிங் வராமல் செய்தார்.. பவுலிங்கில் தாராளம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+