Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஹிட்மேன்னா யாருனு மறந்துருச்சோ" மும்பைக்கு முதல் வெற்றி.. வம்புக்கு இழுக்கும் பல்தான் மீம்ஸ்!

டெல்லி: 16வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 172 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய மும்பை அணி, கடைசி பந்தில் இலக்கை எட்டி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியின் சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்களை பார்க்கலாம்.

டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடர் தொடக்கம் முதலே நிதானமாக ரன் சேர்த்து வருகிறார். மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 47 பந்துகளில் 51 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனை கோவை பிரதர்ஸ் படத்தில் கிரிக்கெட் விளையாட வரும் பிட்ச்சில் தூங்கும் செயலோடு ஒப்பிட்டு, "சார் ஓடிஐ கிரிக்கெட் விளையாடிட்டு இருக்காரு சார்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல் ரகம்.

Fans created some Stunning memes after Mumbai beat Delhi in the last match of the ball in IPL 2023

நேற்றையப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய மூத்த வீரர் பியூஷ் சாவ்லா 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு முக்கியமான 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனை படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து, "உங்களுக்கு வயசாகல" என்று அப்பாஸ் சொல்வதை ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.

Fans created some Stunning memes after Mumbai beat Delhi in the last match of the ball in IPL 2023

25 போட்டிகளுக்கு பின் ரோகித் சர்மா டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அரைசதம் விளாசினார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அவர், 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதனால் இந்த ஆட்டம் ரோகித் சர்மா கம்பேக் என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். இதனை, தில்லுக்கு துட்டு படத்தில் வரும் நடிகர் ஆனந்த்ராஜ் ஒருவரை மிரட்டும்போது, "கொஞ்ச வருஷம் காமெடி செஞ்சா போதுமே, பழைய வில்லன் யாருனு மறந்துருவீங்களே" என்று பேசுவார். அதனை ரோகித் சர்மாவுக்கு மாற்றி, "கொஞ்சம் வருஷம் ஐபிஎல்-ல ஃபார்ம்ல இல்லனா போதுமே ஹிட்மேன் யாருனு மறந்துருவீங்களே" என்று உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

Fans created some Stunning memes after Mumbai beat Delhi in the last match of the ball in IPL 2023

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான நேரத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடந்த ஒரு மாதமாக சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மோசமாக உள்ளது. இதனை சிவாஜி படத்தில் மிளகாய் சாப்பிட்டு அதீதமாக கத்தும் ரஜினியை பார்த்து, "என் மகனுக்கு யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க" என்று மணிவண்ணன் பேசி இருப்பார். அதனை மாற்றி, சூர்யகுமாருக்கு யரோ சூனியம் வச்சுட்டாங்க என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஃபன் கன்டென்ட்.

Fans created some Stunning memes after Mumbai beat Delhi in the last match of the ball in IPL 2023

மும்பை அணி வெற்றிபெற கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அதனை டிம் டேவிட் மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு 2வது ரன்னுக்கு ஓடும் போது, ஃபீல்டர் விக்கெட் கீப்பரிடம் பந்தை கொடுத்துவிடுவார். இருப்பினும், எப்படியோ டிம் டேவிட் விழுந்து புரண்டு பேட்டை கிரீஸிற்குள் கொண்டு சென்றுவிடுவார். நடுவரின் இறுதி தீர்ப்பு வரும் வரை மும்பை ரசிகர்கள் பதட்டத்திலேயே இருந்தனர். இதனை சென்னை - 28 படத்தில் வரும், சீனு கடைசி ரன்னுக்காக ஓடும் போது, நண்பர்கள் அனைவரும் ஓடுடா.. ஓடுடா என்று கத்துவார்கள். கிட்டத்தட்ட டிம் டேவிட் போலவே விழுந்து புரண்டு சீனுவும் கிரீஸிற்குள் சென்றுவிடுவார். இதனை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ராசக்க ரகம்.

Fans created some Stunning memes after Mumbai beat Delhi in the last match of the ball in IPL 2023
Story first published: Wednesday, April 12, 2023, 7:55 [IST]
Other articles published on Apr 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+