Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL வரலாற்றிலேயே சிறந்த கேப்டன் யார்? தோனியை முந்திய ரோதித் சர்மா.. அடித்து கூறும் ரெக்கார்ட்கள் !

மும்பை : ஐபிஎல் தொடர் 15 ஆண்டுகள் நடைபெற்று தற்போது 16வது சீசனை எட்டி உள்ளது. இதில் பல வீரர்கள் சாதாரணமாக களமிறங்கி பிறகு உச்சத்தை தொட்டு இருக்கிறார்கள்.இதில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் ரோகித் சர்மா.2009ஆம் ஆண்டு சீசனில் வளர்ந்து வரும் சிறந்த வீரர் என்ற விருதை பெற்ற ரோகித் சர்மா பிற்காலத்தில் சிறந்த கேப்டன் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட கேப்டன் தோனி என்றால் அதிக ரெகார்டுகளை படைத்திருக்கும் கேப்டன் ரோகித் சர்மா தான் என்று மும்பை ரசிகர்கள் ஆதாரத்துடன் கூறுகிறார்கள்.இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக ஐபிஎல் தொடரில் படைத்த சாதனைகளை தற்போது பார்க்கலாம். ரோகித் சர்மா கேப்டனாக ஐபிஎல் தொடரை ஐந்து முறை வென்று இருக்கிறார்.

Here is the record created by Rohit sharma in IPL history as a player and captain

இது அதிகபட்ச சாதனையாக பார்க்கப்படுகிறது. இதைப் போன்று ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர், ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர், அதிக முறை அணியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரர், இளம் வயதில் ஐபிஎல் கோப்பையை வென்ற வீரர், ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஒரே கேப்டன் போன்ற பெருமை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

இதேபோன்று ஐபிஎல் தொடரில் ஒரே ஆட்டத்தில் சதம் மற்றும் ஹைட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு சொந்தம் ஆக உள்ளது. இதேபோன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் இரண்டு அரை சதம் அடித்துள்ள ஒரே கேப்டன், பிளே ஆப் தொடரில் அதிக வெற்றி சதவீதம் வைத்திருக்கும் வீரர், சிஎஸ்கேவுக்கு எதிராக தொடர்ந்து வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன், அனைத்து அணிகளுக்கும் எதிராக 50 சதவீதத்திற்கு மேல் வெற்றிகளை குவித்துள்ள ஒரே கேப்டன், ஐபிஎல் வரலாற்றில் முதல் போட்டியில் அதிக ஸ்கோர் அடித்த இந்திய வீரர், ஐபிஎல் கோப்பையை மூன்று வித்தியாசமான நாடுகளில் வென்ற ஒரே வீரர் என்ற பல சாதனைகளை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

Here is the record created by Rohit sharma in IPL history as a player and captain

தோனிக்கு எதிராக ரோகித் சர்மா 20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 12 வெற்றியையும் எட்டு தோல்வியும் அடைந்திருக்கிறார். இதேபோன்று விராட் கோலிக்கு எதிராக பத்து வெற்றியையும் 6 தோல்விகளையும் அடைந்துள்ள ரோகித் சர்மா கம்பீருக்கு எதிராக 8 வெற்றியையும் நான்கு தோல்வியும் பெற்றிருக்கிறார்.

வார்னருக்கு எதிராக 5 வெற்றி நான்கு தோல்வியை பெற்றுள்ள ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக நான்கு வெற்றி நான்கு தோல்விகளை கேப்டனாக ரோகித் சர்மா அடைந்திருக்கிறார்.இதைப் போன்று ரெய்னாவிடம் மூன்று வெற்றி இரண்டு தோல்வியை ரோகித் சர்மா கேப்டனாக பெற்று இருக்கிறார். ரோகித் சர்மா ரஹானேவிடம் மட்டும்தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் மூன்றிலும் கேப்டனாக் தோற்று இருக்கிறார்.

Story first published: Wednesday, March 29, 2023, 22:09 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+