Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவானை தொடர்ந்த ஹிட்மேன்... அதிரடி அரைசதம்... அணியை தூக்கி நிறுத்திய கேப்டன்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதி வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே அடித்துள்ளது.

அந்த அணியின் அடுத்தடுத்த வீரர்கள் சொதப்பிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே அணியை தூக்கி நிறுத்தினர்.

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

பஞ்சாப் அதிரடி பௌலிங்

பஞ்சாப் அதிரடி பௌலிங்

இந்த பேட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பான பௌலிங்கை செய்தது. அணியில் புதிதாக இணைந்த ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தீபக் ஹுடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பஞ்சாப் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

ஆனால் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி அரைசதத்தை கடந்தார். 52 பந்துகளில் அவர் 63 ரன்களை அடித்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்கள் அடக்கம்.

சிறப்பான பேட்டிங்

சிறப்பான பேட்டிங்

சூர்யகுமார் யாதவ் 33 ரன்களை குவித்திருந்தார். இன்றைய போட்டியில் ரோகித் சர்மா ஐபிஎல்லில் தனது 40வது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். குறைந்த ஓவர்களின் ஹிட்மேனாக கருதப்படும் ரோகித் சர்மா இதுவரை சென்னையில் விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் சிறப்பான பேட்டிங்கை அளித்துள்ளார்.

ரோகித் 200 ரன்கள் பூர்த்தி

ரோகித் 200 ரன்கள் பூர்த்தி

இதேபோல இந்த ஐபிஎல் தொடரில் அவர் 200 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இந்த தொடரில் இதுவரை டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் மட்டுமே 200 ரன்களை அடித்த முதல் வீரராக இருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா 200 ரன்களை அடித்துள்ள இரண்டாவது வீரராக மாறியுள்ளார்.

Story first published: Friday, April 23, 2021, 22:37 [IST]
Other articles published on Apr 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+