Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கெல்லாம் வாலிபாலே கிரிக்கெட் பால் மாதிரி தான்... கெத்து காட்டும் ஹிட்மேன்!

சென்னை : சென்னையில் வரும் 9ம் தேதி ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் மோதவுள்ளது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்.

இதையொட்டி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா ஒரு படி மேலே சென்று வாலிபாலை கையிலெடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் இதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

வெற்றிக்கான தீவிரம்

வெற்றிக்கான தீவிரம்

ஐபிஎல் 2021 தொடர் வரும் 9ம் தேதி சென்னையில் முதல் போட்டியுடன் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன. இதற்கென இரு அணிகளும் சென்னையில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. முதல் போட்டியில் வெல்லும் தீவிரம் இரு அணிகளிடையேயும் காணப்படுகிறது.

வாலிபால் பயிற்சி

வாலிபால் பயிற்சி

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு கடந்த திங்கட்கிழமை அணியில் இணைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் பயிற்சிகளுக்கிடையில் வாலிபால் பயிற்சியும் மேற்கொண்டார். இந்த புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அள்ளிய புகைப்படங்கள்

அள்ளிய புகைப்படங்கள்

இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்களின் லைக்குகளை பெற்றுள்ளது. இந்த சீசனில் நடத்தப்பட்ட ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. ஜிம்மி நீசம், மில்னே, சாவ்லா, நாதன் ஆகியோர் இந்த சீசனில் அணியில் இணைந்துள்ளனர்

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம்

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம்

அர்ஜூன் டெண்டுல்கரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஹாட்ரிக் கோப்பைகளை வெல்லும் முதலணியாக சாதனை புரியவும் தீவிரம் காட்டி வருகிறது.

Story first published: Sunday, April 4, 2021, 15:54 [IST]
Other articles published on Apr 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+