For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2023 -மும்பைக்கு ஆரம்பமே இவ்வளவு சோகமா.. இவ்வளவு சிக்கலை சரி செய்யுமா? இந்த வருசமும் கடைசியா?

மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறது. இந்த நிலையில் கடைசி சீசனில் 10 அணிகள் பங்கேற்ற போது மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்து சோகமான ரெக்கார்ட் படைத்திருந்தது.

இந்த நிலையில் தோல்வியில் இருந்து மீண்டு இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என மும்பை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். ஆனால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே மும்பை அணிக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை.

இதனால் இம்முறையும் மும்பை கோட்டை விட்டுவிடுமோ என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. மும்பை அணியில் நட்சத்திர வீரராக பும்ரா விளங்குகிறார்.பும்ராவை நம்பி தான் மும்பை அணியின் பந்துவீச்சு படையே இருக்கிறது.

பும்ரா காயம்

பும்ரா காயம்

இந்த நிலையில் பும்ரா தொடரிலிருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. பும்ரா இல்லாமல் மும்பை எப்படி சமாளிக்க போகிறது என்ற கலக்கத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். அடுத்தது மும்பை அணியின் பேட்டிங் பலமாக இருந்த பொலார்ட், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். psl போன்ற தொடர்களில் செம பார்மில் இருக்கும் பொலார்டை மும்பை அணி ஓய்வு பெறுமாறு வற்புறுத்தியது.

சூர்யகுமார் கோல்டன் டக்

சூர்யகுமார் கோல்டன் டக்

அதை எடுத்து பொலார்ட் நடப்பு தொடரில் பேட்டிங் ஆலோசராக மும்பை அணிக்கு செயல்பட உள்ளார். இதனால் மும்பை அணிக்கு சிக்கல் ஏற்பட்டால் அணியை வந்து காப்பாற்றும் பொறுப்பில் பொலார்ட்க்கு பதில் இன்னும் யாரும் வரவில்லை.மும்பை அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருப்பது சூரியகுமார் யாதவ் ஃபார்ம் தான். ஐபிஎல் தொடரில் சூப்பர் ஸ்டார் ஆக சூரிய குமார் யாதவ் விளங்கினார். மும்பை பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாக இருந்த அவர் தற்போது தொடர்ந்து மூன்று கோல்டன் டக்குகளை சூரிய பெற்றுள்ளதார்.

 இஷான் கிஷன் சொதப்பல்

இஷான் கிஷன் சொதப்பல்

இதேபோன்று மும்பை அணி 15 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து தொடக்க வீரர் இசான் கிஷனை வாங்கி இருக்கிறது.அவரும் இந்த ஆண்டு மோசமாக விளையாடி வருகிறார். ஒட்டுமொத்தமாக சராசரி பத்துக்கு மேல் தான் இந்த ஆண்டில் அவர் வைத்துள்ளார். இதனால் இஷான் கிஷனும் சரியாக விளையாடவில்லை என்றால் மும்பை அணியின் கதி அவ்வளவுதான். மும்பை அணியில் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது வெளிநாட்டு வீரர்களில் யாருமே அனுபவம் நிறைந்தவர்களாக இல்லை.

அனுபவ வீரர்கள் இல்லை

அனுபவ வீரர்கள் இல்லை

டிம் டேவிட், டிவால்ட் பிரேவிஸ், ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் மும்பை அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை.

அதுவும் இந்திய ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்று அவர்களுக்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே போன்று அடுத்த பிரச்சனை பும்ராவுக்கு மாற்றுவீராக யாருமே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இல்லை. இதனால் அந்த இடத்தில் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.

பிரச்சினை தீருமா

பிரச்சினை தீருமா

அடுத்த பிரச்சனை ஜோப்ரா ஆச்சர் இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் தற்போது திரும்புகிறார். அவருடைய பந்துவீச்சும் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் என தெரியவில்லை. கேப்டன் ரோகித் சர்மா பந்துகளை நன்றாக அடித்தாலும் அவரும் பெரிய ஸ்கோர் சமீபத்தில் அடிக்கவில்லை. இந்த பிரச்சனைகளை எல்லாம் மும்பை அணி சரி செய்தால் மட்டுமே அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

Story first published: Thursday, March 23, 2023, 20:47 [IST]
Other articles published on Mar 23, 2023
English summary
Huge Problems for Mumbai Indians ahead of IPL 2023 ஐபிஎல் 2023 -மும்பைக்கு ஆரம்மே இவ்வளவு சோகமா.. இவ்வளவு சிக்கலை சரி செய்யுமா? இந்த வருசமும் கடைசியா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+