IND vs NZ: சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு.. விவரம்
ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி, மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ள சாதனையை முறியடிப்பதற்கு கோலிக்கு இன்னும் 139 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளன.
நியூசிலாந்தில் விளையாடப்பட்ட ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்டர்களின் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 18 போட்டிகளில் 38.35 சராசரியுடன் 652 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும்.

அவரது அதிகபட்ச ரன் 163 ஆகும். இப்பட்டியலில் 12 போட்டிகளில் 54.36 சராசரியுடன் 598 ரன்கள் 3 சதங்கள், 2 அரைசதங்கள் குவித்துள்ள வீரேந்தர் சேவாக் இரண்டாவது இடத்தில் உள்ளார்.விராட் கோலி தற்போது 11 போட்டிகளில் 46.72 சராசரியுடன் 514 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும் 4 அரைசதங்களும் அடங்கும். 13 போட்டிகளில் 72.14 என்ற சிறந்த சராசரியுடன் 505 ரன்கள் எடுத்த தோனி நான்காவது இடத்திலும், 12 போட்டிகளில் 425 ரன்களுடன் ராகுல் டிராவிட் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
விராட் கோலி நல்ல பார்மில் உள்ள நிலையில், இந்த தொடரில் 5 போட்டி இருக்கிறது என்பதால், சச்சினின் சாதனையை எளிதில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோலி இந்த தொடரில் நிச்சயம் சதம் அடிப்பார் என்று புஜாரா தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் வரிசை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அணியின் முதல் நான்கு இடங்கள் மாற்றமின்றி வலதுகை பேட்டர்களான தாம், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை கொண்டு அமைக்கப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications


