For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: பாகிஸ்தான் செய்த காரியத்தால் காத்திருக்கும் ஆபத்து.. கிரிக்கெட்டில் இருந்தே தடை?

லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கப் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி விளையாடாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த முடிவு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம் என கூறப்படுகிறது.

திடீர் அறிவிப்பு ஏன்?

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. "உலகக்கோப்பையில் பங்கேற்கத் தடை இல்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அணி களமிறங்காது" என்று பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

India vs Pakistan T20 World Cup 2026 What will affect Pakistan After Refusing to Play Against India

இந்தியாவுக்கு இலவச வெற்றி

ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு அணி குறிப்பிட்ட போட்டியில் விளையாட மறுத்தாலோ அல்லது மைதானத்திற்கு வராவிட்டாலோ, எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி, பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட மறுத்தால், இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டு முழுமையாக 2 புள்ளிகள் கொடுக்கப்படும். இது இந்திய அணி அடுத்த சுற்றுக்குச் செல்லப் பெரிதும் உதவும்.

பாகிஸ்தானுக்குக் காத்திருக்கும் ஆபத்து

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிதான் உலகக்கோப்பையிலேயே அதிக வருவாய் ஈட்டித்தரும் போட்டியாகும். தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள், விளம்பரதாரர்கள் எனப் பல கோடி ரூபாய் இந்தப் போட்டியை நம்பியே முதலீடு செய்துள்ளனர். பாகிஸ்தான் இந்தப் போட்டியைப் புறக்கணித்தால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படும்.

  • ஒளிபரப்பு நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். அவர்கள் ஐசிசி மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்க வாய்ப்புள்ளது.
  • அந்த நஷ்ட ஈட்டுத் தொகையைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வசூலிக்க ஐசிசி நடவடிக்கை எடுக்கலாம்.
  • ஒப்பந்தத்தை மீறியதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் அபராதம் விதிக்கப்படலாம்.
  • நிலைமை மோசமானால், வருங்கால ஐசிசி தொடர்களில் பங்கேற்கப் பாகிஸ்தான் அணிக்குத் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது.

IND vs PAK: பாகிஸ்தான் கதையை முடித்த இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே.. பந்தை எடுத்தவுடன் கவிழ்ந்த பாக்.

மற்ற போட்டிகள்

இந்தியாவுடனான போட்டியைத் தவிர, நெதர்லாந்து (பிப்ரவரி 7), அமெரிக்கா (பிப்ரவரி 10) மற்றும் நமீபியா (பிப்ரவரி 18) ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி திட்டமிட்டபடி விளையாடும். ஒருவேளை லீக் சுற்றைத் தாண்டி, அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத வேண்டிய சூழல் வந்தால் பாகிஸ்தான் என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

Story first published: Monday, February 2, 2026, 6:35 [IST]
Other articles published on Feb 2, 2026
English summary
India vs Pakistan WC match: Pakistan risks severe ICC penalties, including a potential ban from future tournaments and multi-million dollar fines, following its government's shock decision to boycott the high-stakes February 15 clash against India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+