Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை விட 7.5 மடங்கு குறைவு.. ஹிட்மேன் ரோகித் சர்மா சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிள்ளது. அதில் விராட் கோலியை விடவும் ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு மிகவும் குறைவாக இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏறடுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் பிசிசிஐ எப்படி பணக்கார கிரிக்கெட் வாரியமோ, அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டி இந்திய வீரர்களே பணக்கார கிரிக்கெட் வீரர்களாக அறியப்படுகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ரூ.1,550 சொத்துகளும், விராட் கோலி ரூ.1,510 கோடி சொத்துகளும் சேர்த்துள்ளதாக தெரிய வந்தது.

Indian Captain Rohit Sharma Net Worth is Rs.214 Crores which includes investments and Brand endorsements

அந்த வகையில் தற்போதைய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கிரிக்கெட் விளையாடுவதன் மூலமாக ரோகித் சர்மா பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தம் ரூ.7 கோடி ஊதியமாக பெறுகிறார். அதேபோல் ஒவ்வொரு ஒருநாள் போட்டிக்கும் ரூ.6 லட்சமும், ஒவ்வொரு டி20 போட்டிக்கும் ரூ.3 லட்சமும், ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சமும் ஊதியமாக பெற்று வருகிறார்.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆண்டுக்கு ரூ.16 கோடி ஈட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஜியோ சினிமாஸ், மேக்ஸ் லைஃப், ஹப்லாட், அடிடாஸ், ஷார்ப், ரஸ்னா, சியட், லாலிகா, ஐஐஎஃப்எல், வேகா, கோ ஐபிபோ, டிரீம் 11, ஓப்போ, வீடியோகான், போர்ன்வீட்டா, நாய்ஸ், உஷா ஃபேன்ஸ் என்று பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதராக மட்டும் ரூ.5 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

Indian Captain Rohit Sharma Net Worth is Rs.214 Crores which includes investments and Brand endorsements

அதேபோல் லாம்போர்கினி, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, டொயாடா, சுசூகி ஹாயாபூசா உள்ளிட்ட ரூ.6 முதல் 7 கோடி வரையிலான நட்சத்திர அந்தஸ்துள்ள கார்களை வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மும்பை நகரின் முக்கியப் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பிலான 4 அறைகள் கொண்ட அபார்ட்மண்ட், ரூ.5.25 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றையும் ரோகித் சர்மா வாங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரேபிடோபாட்டிக்ஸ் நிறுவனம் வீரூட்ஸ் வெல்னஸ் சொல்யூஷன்ஸ் என்ற ஹெல்த்கேர் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்.

Indian Captain Rohit Sharma Net Worth is Rs.214 Crores which includes investments and Brand endorsements

அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கிரிக்கெட் அகாடமி நடத்தி வருகிறார். அண்மையில் கூட அமெரிக்காவில் தனது கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார் ரோகித் சர்மா. இதன் மூலம் ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு ரூ.214 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை விடவும் 7.5 மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 9, 2023, 12:19 [IST]
Other articles published on Aug 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+